62
62 இகழ்ந்து பேசுவார்கள்; அப்படிப் பேசினாலும் நாம் பொறுமையுடன் பொறுத்துக்கொள்ள வேண்டும். அது தான் உயர்ந்த குணம். அப்படிப் பொறுமையுடன் இருந்தால் நமக்கு மேலும் மேலும் பெருமையும் சிறப்பும் உண்டாகும். பொறுமை என்கின்ற குணம் கடலிலும் பெரிது என்று சொல்லுவார்கள். மாணிக்கம் : ஆம் ஐயா! எங்கள் வீட்டில்கூட அடிக்கடி நான் கேட்டிருக்கின்றேன். பொறுமையாக இரு!, பொறுமையாக இரு!’ என்று அடிக்கடி எங்க அப்பா சொல்லுவார்கள் ஐயா! ஆசிரியர் : குறட்பா சொல்லுகிறேன்; முதலில் எழுதிக் கொள்ளுங்கள். (ஆசிரியர் சொல்லுகின்றார். மாணவர்கள் எழுதுகின் றனர்.) அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை. சொல் விளக்கம் சொல்லுகின்றேன்; எழுதிக்கொள் ளுங்கள் ! அகழ்வாரை - தோண்டுவோரை, தாங்கும் - விழாமல் தாங்குகின்ற, நிலம் - நிலத்தைப்போல, * தம்மை - தம்மை, இகழ்வார் - இகழ்ந்து பேசுவோர்களை, பொறுத்தல் - பொறுத்துக்கொள்ளுதல், தலை - முதன்மையான அறமாகும். (சொல் விளக்கம் சொன்னவுடன் ஆசிரியர் அமைதியாக இருக்கின்றார்; மாணவர்கள் உரையினைப் படித்துக் கொண்டிருக்கின்றனர்.)