56
56 நீட்டிக்கொண்டே இருந்தால் ஊறுபாடு வந்துவிடும், ஆதலால்தான் தேவையானபோதுதான் வெளியே நீட்டும். மற்ற நேரத்தில் எல்லாம் அந்த ஒட்டிற்குள் இழுத்துக்கொள்ளும். முருகேசன் : அந்த ஒட்டினை உடைத்துவிட்டால் அப் போது என்ன செய்யும்? இறந்துவிடுமே! ஆசிரியர் : நன்றாகக் கேட்டுவிட்டாய்! அந்த ஒட்டினை யாராலும் உடைக்கவே முடியாது. அவ்வளவு கடின மாக அந்த ஒடு இருக்கும். மிகவும் வன்மையான ஒடு! இந்த ஆமையினைப் பார்த்ததும் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய நல்ல உயர்வான நீதி ஒன்று இருக் கிறது வாருங்கள் சொல்லுகின்றேன். அதோ, அந்தப் பூத்தொட்டிகளின் பக்கத்தில் போய் உட்காருவோம். (எல்லா மாணவர்களும் அங்கு போப் உட்கார்ந்து கொள்ளுகின்றனர்.) ஆசிரியர் : நமக்கு ஐம்பொறிகள் என்று கூறப்படுவது எவையென்று தெரியுமா? சொல்லுங்கள். வேலன் : நான் சொல்லுகிறேன் ஐயா! மெய், வாய், கண், மூக்கு, செவி, இந்த ஐந்தும்தான் ஐந்து பொறி கள் என்று கூறப்படும். ஆசிரியர் : ஆமைக்கும் ஐந்து உறுப்புகள் என்று பார்த்தீர் கள் அல்லவா? அதுபோல நமக்கிருக்கும் இந்த ஐந்து பொறிகளையும் நன்றாக நினைவில் வைத்துக்கொள் ளுங்கள். மாணிக்கம் : ஐந்து பொறிகளும் நம்மிடத்தில் இருப்பது தெரிகின்றது ஐயா! ஆசிரியர் : இப்போது விளக்கம் சொல்லுகின்றேன் கேளுங் கள். அடக்கம் என்கிற குணம் சிறந்த குணமாகும். எப்போதும் நாம் அடக்கமாக இருந்துவரப் பழக