102
j ().3 இன்பவாழ்வு - எண்ணியதை அடையும் எளிய வழிகள் என்பதுபற்றிப் பேசுவோம். 'நாம் நினைத்தபடியெல்லாம் நடக்கக்கூடாதா?’’ என்று எண்ணாத மக்கள் உலகில் இருக்க முடியாதல்லவா? ஏன் அப்படி நினைக்கச் சொல்லுகிறது மனித உள்ளம் என்று நீங்கள் சிந்தித்துப்பார்த்தல் வேண்டும். மனித உள்ளம் ஏன் அவ்வாறு நினைப்பானேன்? பன்முறையும் நன்கு சிந்தி யுங்கள். நினைத்ததைச் செய்யும் ஆற்றல் மனிதனுக்கு உண்டு. அப்படியென்றால் அவன் ஏன் கவலைப்படுவானேன்? ஏமாற்றம் அடைவானேன்? உண்மை உணராத காரணத் தினாலே யாகும். எண்ணத்தினைச் சொல்லளவில் காட்டி நின்று விடுதலே ஏமாற்றத்தை அளிக்கின்றது. எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணிய ராகப் பெறின். எண்ணியார் - எண்ணியவர்கள், திண்ணியராக - எண்ணிய தொழிலினிடத்தில் வலிமை யுடையவராக, பெறின் - இருந்துவிட்டால், எண்ணிய - எண்ணப்பட்டவைகளெல்லாம், எண்ணியாங்கு - எண்ணியவாறே, எய்துப - அடையப் பெறுவார்கள். இம் மெய்யுரையினை ஊன்றி உள்ளத்தில் வைப்பீர் <历GT辽”ö。