உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

{} I

ஆசிரியர் : வேலன் பதிலும், முருகேசன் கதையும் நன்றா கத்தான் இருந்தன. களிமண் தரையில் நடந்தவர் வழுக்கி விழாமல் இருக்கக் கையில் ஊன்றுகோல் வைத் துக்கொள்ள வேண்டும். அப்படி ஊன்றுகோல் வைத் திருந்தால், வழுக்குகிறபோது தரையில் ஊன்றிக் கொள்ளலாம். ஊன்றிக்கொண்டால் கீழே விழாமல் இருந்திருக்கலாமே! மாணவர்கள் : (எல்லோரும்) ஆமாம் ஐயா! அதுதான் சரியான வழி ஐயா! ஆசிரியர் : திருவள்ளுவர் கூறும் நீதியினைச் சொல்லுகின் றேன் கேளுங்கள். ஒழுக்கமுள்ள பெரியோர்களின் சொற்களை நாம் எப்போதும் கேட்டு நடக்க வேண்டும். அவர்கள் சொல்லுகிற சொற்களைக் கேட்டு மனத்தில் வைத்திருந்தால் நமக்குத் துன்பம் வரும்போது, அந்தப் பெரியவர்கள் சொன்ன சொற்கள் துணையாக இருக்கும். களிமண் தரையில்-வழுக்குகிற தரையில் நடந்து போகும்போது ஊன்றுகோல் உதவியாக இருக்கும். வாழ்க்கை யென்பதும் வழுக்கிவிடுகிற நிலம் போன்றது தான். குறட்பாவையும் அதன் பொருளையும் எழுதிக் கொள்ளுங்கள். - (ஆசிரியர் சொல்லுகிறார் - மாணவர்கள் எழுது கிறார்கள்.) இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல். ஒழுக்கமுடையார் - ஒழுக்கத்தில் சிறந்த பெரியவர்க ளுடைய, வாய்ச் சொல் - வாயில் வருகின்ற சொற்கள், இழுக்கலுடையுழி - வழுக்குதலையுடைய சேற்று நிலத் திலே, -