உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii



முறையில் விரிவுரை நிகழ்த்துதற்கு ஏற்பாடு செய்து நடத்தித், தாங்களும் கேட்டுப் பயன் பெற்றதுடன், இத்தகைய திரட்டு ஒன்றைத் திரட்டுவித்து வெளியிட முன்வந்திருப்பது மிகவும் பாராட்டத்தக்க ஒன்று.

இவ் அருள் முறைத் திரட்டு நூல் நன்கு வெளிவந்து பலர் கையிலும் சென்று பயனளிக்கவும், இந் நற்பணியில் பங்குபற்றிப் பயன்பெறும் அன்பர்கள் பலரும் நலமெலாம் பெற்று நீடுவாழவும் ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கர் திருவருளைச் சிந்திக்கின்றோம்.