பக்கம்:வைணவ உரைவளம்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4. வைணவ உரைவளம் வீடணன் விபீடணாழ்வான்' என்றும், சுக்கிரீவன் மகா ராசர்" என்றும், சடாயு பெரிய உடையார்’ என்றும், திருமலை திருமலை யாழ்வார் என்றும், ஆழ்வார் திருநகரியின் திருக்கோயிலிலுள்ள புளிய மரம் திருப்புளி யாழ்வார்' என்றும், இராமன் பெருமாள்' என்றும், திருவரங்க நாதன் பெரிய பெருமாள்' என்றும், ஆள வந்தார் பெரிய,முதலியார்' என்றும் சம்பிரதாயப் பெயர்க ளுடன் வைணவர்களின் திருவுள்ளத்தில் இடம் பெறவர். இங்ங்ணமே, கூரத்தாழ்வான் ஆழ்வான்' என்றும், கிடாம்பி ஆச்சான் ஆச்சான்' என்றும், திருக்குருகைப் பிரான் பிள்ளான் பிள்ளான்' என்றும், குரு கைக் காவலப்பன் *அப்பன்' என்றும், பெரிய வாச்சான் பிள்ளை ஆச்சான் பிள்ளை' என்றும், முதலியாண்டான் ஆண்டான்' என்றும் சுருக்கமான பெயர்களால் வழங்கப் பெறுவர். எம்பெருமானின் திருக்கழல்கள் ; வைணவத் திருத்தலங் களில் திருவரங்கம் கோயில் என்றும், காஞ்சி பெருமாள் கோயில் என்றும், திருவேங்கடம் திருமலை என்றும் சம்பிரதாயமாக வழங்கப்பெற்று வருகின்றன. நம்மாழ் வாரின் முதற் பிரபந்தமாகிய திருவிருத்தத்தில் திரு வரங்கம், திருவெஃகா, திருவேங்கடம் என்ற மூன்று திருப்பதிகளின் பெயர்கள் மட்டிலும் வருவதால் (28, 26, 31), இச்சிறப்புப் பெயர்கள் பெற்றதாகப் பெரியோர் பணிப்பர். திருவரங்கம் அழகிய மணவாளனின் திருவடி திருப்பொலிந்த சேவடி (பெரியாழ், திரு. 5, 4; 7) என்றும், கச்சி நகர் தேவப் பெருமாளுடைய திருவடி துயரறு சுடரடி' (திருவாய் 1. : 1) என்றும், திருவேங்கடமுடையானின் திருவடி 'பூவார் கழல்கள் (திருவாய் 6. 10; 4) என்றும் சம்பிரதாயத் திருநாமங்களாகப் பெரியோர் பணிப்பர் (பாசுரம்-200 காண்க. இங்ங்னமே, சரணாகதிக்கு சிறநத எடுத்துக்காட்டாக விளங்கும் ஏழுமலையான் திருவாய் மொழியில் (6, 10; 10) "கிகரில் புகழாய்' என்பதால் வாத்சல்யமும், உலகம் மூன்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/43&oldid=921246" இலிருந்து மீள்விக்கப்பட்டது