பக்கம்:வைணவ உரைவளம்.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3ገ2 வைணவ உரைவளம் வா, ஆசீவிஷத்திற்கு" ஒத்த அம்புகளையும் கொண்டு வா' என்றபோது கடல்கீழ் மண் கொண்டு மேல் மண் எறிந்தாப் போலேயாயிற்று, இவள் மடலூர்வன்' என்ற துணிவைக் கேட்டு அவன் தன் சர்வாதி கத்துவம் கலங்கின படி என்று அருளிச் செய்தார். கடலரசனை நோக்கிப் பெருமாள் சரணாகதி பண்ணச் செய்தேயும் அவன் முகம் காட்டாவிட்டவாறே இளைய பெருமாளை நோக்கி இலட்சுமணா, வில்லைக் கொண்டு வா’ என்று நியமித் தருளியவுடனே கடல் கலங்கினது இராமாயணப் புகழ் வாய்ந்தது. சீராமன் அம்பு தொடுக்க நினைத்ததும் ஆழ்வார் மடலூர் வேன்" என்றதும் துல்யமாகையாலே இப்போது கடல் வண்ணனான எம்பெருமான்) மடலூர் வேன் என்ற சொல்லைக் கேட்டவுடனே கலங்கினானா யிற்று. ஆக, இத்தன்மையிலே சாம்யம் என்று அனந்தாழ் வான் திருவுள்ளம் பற்றினபடி. 174 எங்ங் னேயோ அன்னை மீர்காள்! என்னை முனிவதுநீர் கங்கள் கோலத் திருக்கு றுங்குடி கம்பியைநான் கண்டபின் சங்கி னோடும் கேமி யோடும் தாமரைக் கண்களோடும் செங்க ணிவாய் ஒன்றி னோடும் செல்கின்றது.என் நெஞ்சமே.”* |எங்ங்னேயோ-எப்படிப் பொருந்தும்; முனிவதுசீறுவது, கோலம்-அழகிய; கண்டபின்சேவிக்கப் பெற்ற பின்பு: நேமி-திருஆழி./ T19. ஆசி விஷம்-பாம்பு 20. ரீ இராமா. யுத்த. 21:22 21. திருவாய். 5.5:1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வைணவ_உரைவளம்.pdf/395&oldid=921184" இலிருந்து மீள்விக்கப்பட்டது