பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறத்திணை இயல்-நூற்பாக 窃°

யும் பாடாண்டிணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை யொப்புமைபற்றிச் சார்புடைய வாதலுங் கூறுதற்கு அரில்தப வுணர்ந்தோ ரென்றார். ஒன்று ஒன்றற்குச் சார்பாமாறு அவ்வச் சூத்திரங்களுட் கூறுதும். தானே யென்றார், புறத்திணை பல வற்றுள் ஒன்றை வாங்குதலின். பாடாண்டிணை ஒழிந்தனவற்றிற் கும் இஃதொக்கும். களவொழுக்கமுங் கங்குற் காலமுங் காவலர் கடுகினுந் தான் கருதிய பொருளை இரவின்கண் முடித்து மீடலும்’ போல்வன ஒத்தவின் வெட்சி குறிஞ்சிக்குப் புறனென்றார். வெட்சித் திணையாவது களவின்கண் நிரை கொள்ளும் ஒழுக்கம்; இதற்கு அப் பூச் சூடுதலும் உரித்தென்று கொள்க. வேற்றுப் புலத்து வாழும் பார்ப்பார் முதலியோர் அஞ்சி அரண்சேர்வதோர் உபாயமாதலின் உட்குவரத் தோன்றுமென்றார். மக்களும் மாவும் முதலியன சென்று நீருண்ணுந் துறைபோலப் பலவகைப்பட்ட பொருளும் ஒருவகைப்பட்டு இயங்குதலாகு மார்க்கமாதலிற் றுறையென்றார்; எல்லாவழியு மென்பதனை எல்லாத் துறையுங் காவல்போற்றினார் என்பவாகலின். எனவே திணையுந் துறையுங் கொண்டாராயிற்று. அகத்திணைக்குத் துறை யுட்பகுதி களெல்லாம் விரித்துக்கூறிப் பின்னும் பன்முறையாற் பரந்துபட்டு வரம்பிகந்தனவற்றையுந் தொகுத்துத் துறைப்படுத்துக் கிளவி கூறுக என்றற்குச் செய்யுளியலுள் துறையென்பது உறுப்பாகக் கூறினார். புறத்திணைக்கு அங்ஙனம் பரந்துபட விரித்தோதாது தொகுத்து இலக்கணஞ் செய்தாராயினும் அவையும் அவ்வாறே பலபொருட்பகுதியும் உடையவென்பது உணர்த்துதற்குத் துறை யெனப் பெயராகக் கொடுத்தார். இதனானே. அகப்பொருட்பகுதி பலவாயினும் ஒரு செய்யுளுட் பலபொருள் விராஅய் வரினும், ஒரு துறையாயினாற்போலப் புறத்திணைக்கும் அவ்வப்பொருட் பகுதி யும் ஒரு துறையாதலும், ஒரு செய்யுளுட் பலதுறை ஒருங்குவந்தும் ஒரு துறைப்படுதலுங் கொள்க. இன்னும் இதனானே அகத் திணைக்கு உரியனவெல்லாம் புறத்திணைக்குங் கொள்க."

1. பாலை, பெருந்திணை, கைக்கிளையென்னும் அகத்திணைகட்குத் தமக் கென நிலமில்லாதவாறுபோலவே அவற்றின் புறத்தவாகிய வாகை, காஞ்சி, பாடாண் என்னுந் திணைகட்கும் தமக்கென நிலமில்லை என்பதாம்.

2. வெட்சிதானே என் புழி ஏகாரம், புறத்திணை ஏழனுள் ஒன்றை மட்டும் பிரித்தெடுத்துக் கூறுதலின் பிரிநிலை ஏகாரமாகும். இவ்வாறே வஞ்சிதானே? *உழிஞைதானே? தும்பை தானே வாகைதானே? காஞ்சிதானே? எனப் பின் வரும் தொடர்களில் ஸ்கா ரகாரங்களும் பிரிநிலைக்கண் வந்தன என்பதாம்.

3. நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்’ விரித்துப் பாடப் பெற்றுவரும் அகத்தினையொழுகலாற்தை விளக்கும் முறையில் அகத்திணைக்குரிய துறைப் பகுதிகளையெல்லாம் தலைவன் தலைவி தோழி முதலிய அகத்தினை மாந்தர்க்