பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

6 தமிழ் பயிற்றும் முறை

களிப்படைகின்றது ; மனம் அமைதியுறுகின்றது. புற நானூறு போன்ற இலக்கியங்களில் படைத்திறம் வாய்ந்த பெரு வேந்தர்களையும், கொடைத்திறம் மிக்க வள்ளல் களையும், கற்றறிந்து அடங்கிய சான்றோர்களேயும் காணும் பொழுது இளம் மாணாக்கர்களின் எதிர்கால வாழ்வு சிறக்கும் வழிகள் தோன்றும் , அங்குக் காணப்பெறும் நிகழ்ச்சிகள் அவர்கள் வாழ்வைச் சிறப்பிக்கவும் கூடும்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் மக்கள் வாழ்க்கையிலும், கருத்துலகிலும், அனுபவத்திலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அவை மக்கள் மனப்பான்மையைத் தலைகீழாக மாற்றியிருக்கின்றன என்று கூடக் கூறலாம். புதிய மனப்பான்மையின் அடிப்படையில் தோன்றியவற்றில் முக்கியமானது தாய்மொழிப்பற்று. விடுதலே பெற்ற நம் நாட்டில் இஃது எம்மருங்கும் காணப்பெறும் பண்பாகக் காட்சி அளிக்கின்றது. இன்று எங்கும் தமிழ் முழக்கம் கேட்கப்படுகின்றது; எல்லாத் துறைகளிலும் தமிழ் மணம் கமழ்கின்றது. தேசிய இயக்கம் தோன்றியதிலிருந்து தாய்மொழி இயக்கமும் தோன்றி வளர்ந்து, நாடு விடுதலை எய்திய பிறகு அஃது என்றுமில்லாத புதிய வேகத்தை இன்று பெற்றிருக்கின்றது. தாய்மொழியில் எண்ணற்ற நாளிதழ்கள், கிழமைஇதழ்கள், பிறைஇதழ்கள், திங்கள் இதழ்கள் தோன்றி வேகமாகப் பரவி மக்கள் மனதைக் கெளவிக்கொண்டிருக்கின்றன. இதுகாறும் பொதுமக்கள் வாழ்வுடன் நெருங்கிச் சேராமலிருந்த இலக்கிய வாழ்வு அவர்கள் வாழ்வுடன் சேரத்தொடங்கிவிட்டது. இலக்கியச் சுவையும், கவிதை இன்பமும் பாமரமக்களுக்கு இல்லையென்றும், கற்றறிந்த புலவர்களுக்குமட்டுமே இலக்கியம் உரிய பொருளென்றும் நாட்டிடையே வேரூன்றி நிலவியிருந்த கருத்து மாறி விட்டது. இன்று பாமரமக்கள் மனத்தின்மீதும் இலக்கிய வானம் கவிந்து அவர்கள் சுவைத்து அனுபவிக்கக்கூடிய முறையில் கவிதை மழை பொழியவேண்டும் என்ற கருத்து மெல்ல எழுந்து வெற்றியும் பெற்றிருக்கின்றது. இத்துறை