உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விசிறி வாழை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குருத்து பதினொன்று

111


‘அப்படிப்பட்ட அந்த ஆசை என்ன?’ வென்று சேதுபதியைக் கேட்கும் தீரம் பாரதிக்கோ, அவள் அத்தைக்கோ இருக்கவில்லை.

ஆனால் பாரதி மட்டும் தன் தந்தையைப் பார்த்து, “அப்படியானால் அந்த ஆசையை விட்டு விடுங்களேன்” என்றாள். அது கேட்ட சேதுபதி தமக்குள்ளாகவே சிரித்துக் கொண்டார். அவருடைய உள்ளத்தின் அடிவாரத்தில் ஆழ்ந்து கிடக்கும் ரகசியம், இதுவரை பார்வதியே கூட அறியாத அந்த ரகசியம், மகளிடமோ தங்கையிடமோ சொல்லி ஆறுதல் பெறக் கூடியதல்லவே!

சாப்பாட்டை அரை குறையாக முடித்துக் கொண்ட சேதுபதி, சட்டென்று நாற்காலியைவிட்டு எழுந்து நின்றவராய், “சரி, பாரதி நேரமாகிறது; நீ போய்ப் படிக்கலாம்” என்று கூறிவிட்டுத் தமது அறையை நோக்கிச் சென்றார்.

“ஆசையை விட்டுவிடும்படி அப்பாவுக்குச் சுலபமாகச் சொல்லிவிட்டேன். என் மனத்திலுள்ள ஆசையை என்னுள் விடமுடியவில்லையே! ராஜாவைப்பற்றி என் அந்தரங்கத்தில் கொண்டுள்ள எண்ணங்களை அகற்றிவிட முடியவில்லையே! என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவளாய்த் தன்னுடைய அறையை நோக்கி நடந்தாள் பாரதி.

தம்முடைய அறைக்குள் பிரவேசித்த சேதுபதியின் உள்ளம் பார்வதியைப்பற்றியே எண்ணமிட்டுக் கொண்டிருந்தது. அவளுடன் அன்று மாலை விவாதித்துக் கொண்டிருந்த விஷயங்களெல்லாம் அவர் நினைவுக்கு வந்தன பார்வதியிடம் எனக்கு ஏன் இத்தனை அக்கறை!. எந்நேரமும் என் மனம் ஏன் அவளைப்பற்றியே எண்ணிக் கொண்டிருக்கிறது?

அவள் எப்போதும் என் அருகிலேயே இருக்க வேண்டும் என்று என் உள்ளம் விரும்புவது எதனால்? அவளைப் பிரிய நேரும் போதெல்லாம். ஏதோ ஒரு பெரும் நஷ்டம் ஏற்பட்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விசிறி_வாழை.pdf/115&oldid=1292800" இலிருந்து மீள்விக்கப்பட்டது