பக்கம்:தொல்காப்பியம் புறத்திணையியல் உரைவளம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: தோல்காப்பியம்-பொருளதிகாரம் - உரைவளம்

ளோடு ஒன்றவைத்தல்' (மரபு I) என்னுந் தந்திர உத்திக்கும் பொருந்தாதாகி 'மிகைபடக் கூறல்' ' தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல் (மரபு. அ) என்னும் குற்றமும் பயக்கும் என்க அன்றியும் பெருந்திணைப் புறனாகிய காஞ்சி நிலையாமை யாத லானும், பொதுவியல் என்பது,

'பல் அமர் செய்து படையுள் தப்பிய நல்லாண் மாக்கள் எல்லாரும் பெறுதலின் திறப்பட மொழிந்து தெரிய விசித்து முதற் பட எண்ணிய எழுதிணைக்கும் உரித்தே' எனத் தாமே கூறுகின்றாராதலின், மறத்திற்கு முதலாகிய வெட் சியின் எடுத்துக் கோடற்கண்ணும் கூறாமையானும், கைக் கிளையும் பெருந்திணையும் புறம் என்றாராயின் அகத்திணை ஏழ் என்னாது ஐந்து எனல் வேண்டுமாதலானும், பிரமம் முதலாகச் சொல்லப்பட்ட மணம் எட்டனுள்ளும் யாழோர் கூட்டமாகிய மணத்தை ஒழித்து ஏனைய ஏழும் புறப்பொருளாதல் வேண்டு தலானும், முனைவன் நூலிற்கும் கலி முதலாகிய சான்றோர் செய்யுட்கும் உயர்ந்தோர் வழக்கிற்கும் பொருந்தாது என்க."

1. அகம் புறம் என்பன காரணப்பெயர்கள் . உள் ளத்தின் உணர்வள வில் உணரப்படும் குறிஞ்சி முதலிய அகத்தினை கள் எழுடன் வெட்சி முதலிய திணை கள் ஏழும் முறையே தொடர்புடையனவாய் அவற்றின் புறத்தனவாக எல்லார்க் கும் புலப்பட நிகழ்தலின் புறம் எனப்பட்டன.

இனி, புறத்திணைகள் பன்னிரண்டெனக் கொண்டு, வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை என்னும் ஏழும் மறத் துறை பற்றியன வாதல் ன் புறம் என வும், வாகை, பாடாண், பொதுவியல் என்பன மூன்றும் புறப் புறம் எனவும், கைக்கினை பெருந்திணை என்பன இரண்டும் அகப்புறம் எனவும் பகுத்துரைப்பர் பன்னிருபடலமுடையார், அவர் கூறுமாறு புறத்திணைகள் பன்னி ரன்டாயின் அவற்றைப்புறமாகக் கொண்டுள்ள அகத்தினைகளும் பன்னிரண்டா தல் வேண்டும். அங்ஙனமன்றி அகத்தினைகள் ஏழாகவேயிருக்க, அவற்றின் புறத்தவாகிய புறத்திணைகள் மட்டும் பன்னிரண்டாம் என்றல், முன்னர்க்கூறிய பெர்ருளோடு பின்னர்க்கூறப்படும் பொருளும் ஒன்றிப் பொருந்துமாறு அமைத்தல் என்னும் நூற்புணர்ப்புக்கு முரண்பட்டதாய், வழிநூல் செய்வோன் முன்னோன் நூலின் ஆதரவின்றித் தானே ஒரு பொருளைக் கருதிக் கூறல் என்னும் குற்றத் தின் பாற்படும். அன்றியும் பெருந்தினை யாகிய அகத்திணைக்குப் புறனாகிய காஞ்சித் திணை என்பது, பல்வேறு நிலையாமையினை புணர்த்துவதாகலின், அதனை மறனுடை மரபின வாகிய புறத்திணைகளுள் ஒன்றாக இணைத்துரைத் தல் பொருந்தாது. இனி, அவர் கூறும் பொதுவியல் என்பது பலவகைப்பட்ட போர்த்துறைகளில் ஈடுபட்டுள்ள வீரர்களாகிய ஆடவர் எல்லார்க்கும் பொதுவாக அரியதொரு தனித்திணையாயின் அதனைப் புறத்திணைகளை விரித்துரைக்கும் ஆர்லின் தொடக்சு த்திலேயே வெட்சிப்படலத்தின் முன் முதற்படலமாகக் கூறியிருத் தல் வேண்டும். இனி, கைக்கிளை பெருந்தினை என்னும் அகத்திணை யிரண்டி னையும் புறத்தினையெனக் கொள்ளின், அகத்தினை ஏழு என்னும் முன்னோர் கொள் கைக்கு முரணாக அகத்திணை ஐந்தே எனக் கூற வேண்டிய நிலையேற் படும். அங்ஙனம் அகத்திணை ஐந்தே எனக் கொள்ளின், பிரமம் முதலாகக் கூறப்பட்ட எண் வகை மனங்களுள் யாழோர் கூட்டமாகிய கந்தருவம் ஒன்று நீங்கலாக ஏனைய ஏழு மனங்களும் புறத்திணை யொழுகலாறுகளாகவே கூற வேண்டிவரும். ஆகவே புறத்தினைகள் பன்னி ன் டெனப் பின் வந்தோர்