பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

J 4 - விவாகமானவர்களுக்கு - லர். நாள்தோறும் ஏராளமாய் வருவர், அநேகர் போய் விடுவர், ஆனல் சிலர் போவதில்லை. அவளுடைய குழந்தைகளோடு குழந்தைகளாய்த் தங்கிவிடுவர். அப் படித் தங்குபவர்தான் நிமிஷத்துக்கு 7 பேர். விருந்தாளிகள் வருகிறவர்களையும் போகிறவர்களையும் கணக்கிடவில்லை. வந்து தங்கிவிடுகிறவர்களை மட்டுமே கணக்கிட்டோம். அவர்களே வருடந்தோறும் 37; லட்சம் வீதம் பெருகி வருகிருர்கள். ஆனல் பாரத தேவி-நம் தாயார்-இந்த விருந்தாளிக் கூட்டத்தைச் சமாளிக்க முடி யுமா ? முன்ளிைல் உலகம் முழுவதற்கும் உணவு ஊட்டிய அன்னை, இந்நாளில் தன் குழந்தைகளுக்கே அன்ன்ம் அளிக்க முடியாத நிலைமையில் இருக்கிருள். சில வருடங் களுக்கு முன் அகில இந்திய வைத்திய இலாகா அத்யட்ச கராக இருந்த ஸர் ஜாண் மீகர் 35 கோடி இந்திய மக்க ஒளில் 14 கோடிப் பேரே வயிருர உண்கிரு.ர்கள்;14 கோடிப் பேர்க்கு அரை வயிறும் கால் வயிறுந்தான்; பாக்கி 7.கோடிக்கோ காலி வயிறுதான்; இதுதான் இந்திய மக்கள் நிலைமை என்று கூறினர். இந்த நிலைமையில் நமக்கு விருந்தாளிகள் தேவையா ? தற்கு என்ன யோசனை முதலில் ஒரு குடும்பத்துக்குச் சான்ன யோசனைதான் இந்த இந்தியக் குடும்பத்துக்கும் என்பதில் சந்தேகமில்லை. ' போதும் விருந்தாள்கள் ' என்று கதவை அடைப்பதே யோசனை. s 14 கோடி முழு வயிறும், 14 கோடி அரை வயிறும் சாப் பிடுகிருர்கள் என்று கூறினேன். அதனுல் இந்த நாட்டில் சுமார் 20 கோடி பேர்தான் வயிருர் உண்ண் முடியும். பாக்கி 15 கோடியும் - பட்டினிதான். அதனல் அந்த 15 கோடியும் அநாவசியம் என்பது தெளிவாகும். இந்தி யாவில் இப்பொழுது இருபது கோடி மக்கள்தான் வாழ லாம். இதை யாரும் ஒப்புக்கொள்வர். ஆனல் அந்த 15கோடி பேரையும் என்ன செய்வது ? வெளிய்ே தொலைக்க முடியுமா ? முடியாது; முடியாது. இப்பொழுது நாம் 35 கோடியிலிருந்து சுமார் 40 கோடியாகியிருக்கிருேம். 40 கோடி மக்களும் எப்படியேனும் சமாளித்துவருவோம். புதிதாக குழந்தைகள் பெருமல் மட்டும் இருந்துவிட்டால்; வயதானவர்கள் இறக்க இறக்க இன்னும் சில வருஷங் கவில் 20 கோடிக்கு வந்துவிடுவோம்.