❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
37
'நான் நாத்திகன்-பகுத்தறிவு வாதி-இந்தக் கோயில் குட முழுக்கு விவகாரம் எனக்கு ஒத்து வராது
'அப்படியா சங்கதி-இந்தாப்பா ஜெயக்குமார்-வழியில் டாக்டர் விசாலாட்சியம்மாவை பார்த்தேன்-கூட்டி வா...'
'நீங்க மிரட்டுறதே போதாதா எஸ்.டி.எஸ். ? நான் ஒத்துவராதுன்னுதான் சொன்னேனே தவிர, ஒத்துழைக்க மாட்டேன்னா சொன்னேன்? எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தேன்-நம் புரட்சித் தெய்வம் ஒன்றாய் அரும்பி பலவாய் நிற்பவள். அவளே சிவன்-அவளே தட்சி ணாமூர்த்தி. அவளே விஷ்ணு-அவளில்லாமல் சிவனில்லை. ஆனால் சிவனில்லாமல் அவளுண்டு. வேண்டுமானால், அந்த அருட்பெரும் ஜோதிக்கு தொண்டாற்றும் நம்மைநவீன நாயன்மாராய் சிலையெடுக்கச் செய்து- கிராமத்தின் சேரி போல ஒரு ஒதுக்குபுறமான இடத்தில், சிலைகளாய் நிற்போம்...'
தமிழில் புலவர் பட்டம் பெற்ற இந்திரகுமாரிக்கு ஒரு சந்தேகம்-கேட்டே விட்டார்.
'அறுபத்து மூவரும்-ஈஸ்வரனைத்தான் அதிகமாய் பாடினார்கள்; பராசக்தியை, போனால் போகிறது என்பது போல்தான் பாடினார்கள்-ஆகையால் அம்மையின் திருக்கோவிலில் அவர்களை...'
‘என்னம்மா நீ-அன்றைய நாயன்மார்- ஈஸ்வரியை ஒதுக்கி வைத்த பாவத்திற்கு பரிகாரம் தேடத்தான் , நம் வடிவில் நவீன நாயன்மார்களாய் அவதாரம் எடுத்திருக்கிறார்கள். இது கூடவா ஒங்களுக்கு தெரியலே...'