8 சு. சமுத்திரம் சொல்லுறேன். ஏண்டா கேட்கமாட்டேங்கே... ஒன் காதுல ஈயத்தைக் காய்ச்சி ஊத்தனும் உன் எதிருல... துக்குப் போட்டுச் சாகப் போறேனா...இல்லியான்னு பாருடா... தேவடியாமவனே...' சாமியார் திடுக்கிட்டுக் கண் விழித்தார். கோவிலுக்கு வெளியே, கத்தியதில் களைத்துப்போய் ஒரு தொழு நோயாளி நின்றுகொண்டிருந்தார். உடம்பெங்கும் வெந்துபோனது போன்ற சதைக் கட்டிகள். குறுகிக் கொண்டிருக்கும் அவயவங்கள். இந்த நோயாளியை, சாமியார் கடந்த ஆறுமாத காலமாகப் பார்க்கிறார். வாரத்தில் ஒரு தடவை, எப்போதாவது வருவார். அதுவும், தான் கோவிலுக்குள் இருந்தால், சற்று தொலைவில் பதுங்கி இருப்பவர்போல் இருந்துவிட்டு, தான் போகும்போது, தட்டுத்தடுமாறி பயபக்தியுடன் எழுந்து கோவிலுக்கு சற்று முன்னால் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டுப் போகிறவர். அவருக்கு இன்றைக்கு என்ன வந்தது? சாமியார், அந்த தொழு நோயாளியையே வெறித்துப் பார்த்தார். ஈஸ்வர நிந்தனை பாவம்...மகா பாவம்..." என்று சொல்லக்கூட நினைத்து, பிறகு மெளனமாக அவரைப் பார்த்தார். ஒருவேளை தன்னைத்தான் அவர் அப்படித் திட்டினாரோ என்று நினைத்தவர்போல், சற்று மோவாயை உயர்த்திப் பார்த்தார். இதற்குள், சுய நினைவுக்கு வந்தவர்போல் தோன்றி அந்த உருக்குலைந்த நோயாளி, கனகளால் கெஞ்சி, கைகளால் கும்பிட்டு, உடைந்த குரலில் ஒப்பாரி வைப்பதுபோல் பேசினார். 'மன்னிச்சுடு சாமீ...நானும் நடையா நடக்கேன்... இவன் சீக்கிரமா கூட்டிக்கிட்டு போகமாட்டக்கான்... ஒங்க நிஷ்டையக் கலைச்சிட்டேன்...நான் பாவி...'
பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/14
Appearance