40 நாற்பெரும் புலவர்கள் பட்ட கண்ணிரை ஒழித்த்ல் மாட்டளாய் வருந்தி அழுதாள் ஒருத்தி. அம்மங்கை யாவளோ?' என்று பேகனும் மனமுருகக் கூறினர். பின்னர்ப் புவவர் அங்கு நின்றும் நீங்கி, பறம்பு நாட்டை அடைந்து, வேள்-பாரியோடு இனிது உறைவாராயினர். மூவேந்தர் முற்றுகை பாரிவேளது புகழ் தமிழ்நாடுகளில் பரவ முடியுடை மூவேந்தரும் அவன் மீது பொறாமை கொண்டனர்.பொறாமை என்பது மக்கள் மனத்தே உண்டாகும் ஒரு தீய எண்ணம். அஃது அறியாமை யால் உண்டாவதேயன்றி வேறன்று. கற்றோரா யினும் மற்றோராயினும், வறிஞராயினும், செல்வ ராயினும், இத்தீய எண்ணம் இல்லாதார் இலர். பிறரது செல்வப் பெருக்கைக் கண்டு, அவர் மீது பொறாமை கொள்பவர் பலர். பிறர் கல்வி யறிவைப் பார்த்து, தம்மினும் மேம்பட்டவராய் அவர் விளங்குதலைக் காணச் சகியாதார் பலர். பிறர் தமது கொடைத் திறத்தால் எய்தும் புகழைக் கண்டு அவர் மீது பொறாமை கொள்பவர் சிலர். வேந்தராயினும் முற்றும் துறந்த பெரியராயினும் இப்பொறாமை என்னும் கொடிய பேய் அவர் களைப் பிடித்துத் தன் ஆட்சியை செலுத்துதல் பொறாமை கொண்ட மூவேந்தரும் ஒன்று சேர்ந்து தத்தம் தானை களோடு சென்று
பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/42
Appearance