சு-சமுத்திரம் 21 அன்று இரவு, வெகுநேரம் வரை அண்ணாவி தூங்கவில்லை எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், ஏ, மனமே அஞ்சாதே! எல்லாம் ஆண்டவனின் சித்தம்' என்று ஒரு நிமிடம் சொல்லுவார். தூக்கம் தானாய் வந்துவிடும் மனைவி இறந்தபோதிலும் சரி, இந்தச் சாதாரனச் சொற்கள் மந்திரம் போல் பலிக்கும் ஆனால், இன்றோ இந்த வார்த்தைகளைப் பயன்படுத்த வேண்டும் என்ற புலனுணர்வே அவருக்குப் புலனாகவில்லை "உங்க மேல ஆக்ஷன் எடுத்தா ஆபீலையே பொசுக்கிப் பிடுவோம்" என்று சொன்ன ராமசாமியின் வார்த்தையும், "நான் பெத்த மவனே, உங்ககிட்ட மரியாதை இல்லாம நடந்தால், அவ்னைக் கண்டதுண்டமாய் வெட்டிப் புடுவேன்" என்று கூறிய தங்கையாவின் பேச்சும், அவருக்கு எங்கோ ஒலிப்பது போல் கேட்டது அவருக்கு ஏற்பட்ட அவமானம் வெளியே தெரிந்தால் தலைமையாசிரியர் ஒரு நாள் கூட இருக்க முடியாது அவர் நினைத்தால், அந்தத் தலைமையை இருபத்துநாலு மணி நேரத்தில், அங்கிருந்து துக்க முடியும் கடைசியில் என்ன நிற்கும்? அவர் கண்ணிலும் மேலாய் வளர்த்த அந்தப் பள்ளிக்கூடத்தை, 'பிராப்ளம் ஸ்கூல்' என்று அதிகாரிகளும், தகராறு பிடிச்ச பள்ளிக்கூடம்' என்று வெளியூர்க்காரர்களும் எள்ளி நகையாடுவார்கள் அந்தக் கெட்ட பெயருக்கு அவர் ஒரு தரப்பாக இருக்க விரும்பவில்லை எந்தத் தனிமனிதனையும் விட, ஒரு ஸ்தாபனம் பெரிது மனிதனுக்காகத்தான் ஸ்தாபனம் என்றாலும், அந்த ஸ்தாபனத்தை மானுடமாகக் கருதும்போது, தனிமனிதன் முக்கியத்துவமற்றவன் ஆகிறான் எண்ணற்ற துளிகள் சேர்ந்த கடலில், முதல் துளி என்பதற்காக, அதற்கு முக்கியத்துவம் கொடுக்கலாகாது சுயநல மனிதன் ஒரு ஸ்தாபனத்தையே ஆட்டிப் படைக்கலாம் ஆனால் அந்த மனிதன் போகக் கூடியவன் ஸ்தாபனம் போகாதது - போகக் கூடாதது அண்ணாவி நீண்டநேரம் சிந்தித்து, காலை மூன்று மணிக்கு ஒரு முடிவுக்கு வந்தார் அதன்பிறகு நன்றாகத் துங்கினார் மறுநாள், தான் ஓய்வு பெறப்போவதாக அரசுக்கு எழுதிய ஒரு கடிதத்தையும், அதற்கு முன்னேற்பாடாக நான்கு மாத விடுமுறை விண்ணப்பத்தையும் அண்ணாவி தலைமை ஆசிரியரிடம் கொடுத்தார் "உடனே, ஆக்ஷன் எடுக்கிறேன்" என்று தலைமை தலையாட்டியது அந்தத் தலையில் ஆணவம் நிறைந்திருப்பது, அண்ணாவிக்குத் தெளிவாகத் தெரிந்தது
பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/23
Appearance