உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குற்றம் பார்க்கில்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 37 'பாத்தியா முத்தையா அவன் பேசறதை உன் முகத்துக்காகப் பார்க்கிறோம் இல்லன்னா, இங்கேயே குழி வெட்டி மூடிடுவோம்" என்றான் நால்வரில் நல்லவன் ஒருவள் வேலு, "அட மானங்கெட்ட மக்களா எனக்காடா குழி வெட்டுவீங்க குழி?" என்று பொரிந்தான் முத்தையனுக்கு ஏக ஆத்திரம் வேலுவைப் பார்த்து, "கழுதைப்பயல, ஏன்டா கழுதை மாதிரி கத்தற? பேசாம வீட்டுக்குப் போடா" என்று உரிமையோடு கோபித்தான் வேலு ஒரு துள்ளுத் துள்ளினான் "எங்க இன் ஸ்பெக்டர் அண்ணனே இந்த மாதிரி கேட்க மாட்டாரு. இவரு யோக்கியரு வந்துட்டாரு" என்றான் அண்ணனைப் பார்த்து முத்தையன், காய்ப்பு விழுந்த கையால், லேசாக வேலுவின் தலையைத் தட்டி, "போடா வீட்டுக்கு" என்றான் வேலு குதி குதி' என்று குதித்தான் "கூலிக்குப் போற பயலே, என்னையாடா அடிச்சே? உன்ன என்ன பண்ணறேன்னு பாரு" என்று "ஒ" வென்று கத்திக் கொண்டு ஊரைப் பார்த்து ஓடினான் அவனைத் துரத்திக் கொண்டு பின்னால் ஓடப்போன முத்தையினை, அந்த நால்வரும் பிடித்துக் கொண்டார்கள் முத்தையனுக்குக் கோபத்தைவிட வருத்தமே அதிகம் அவன் வளர்த்த பிள்ளை, அவனையே 'அடா புடா என்று சொல்கிறான் இந்த வேலுவை எத்தனை தடவை அடித்திருப்பான்! ஏன்? சின்னப் பயலைக்கூட எத்தனையோ தடவை அடித்திருக்கானே அவன் பெரியய்யா, "முத்தையா, இந்தப் பயல்க காலு தரையில் பாவாம நடக்கிறாங்க கொஞ்சம் மண்டையிலே தட்டி வைடா" என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறார் வரட்டும் பெரியய்யாவிடம் சொல்லி, அங்கேயே இந்த வேலுப்பய்ல இரண்டு போடு போடணும் முத்துப்புதியவன் வீட்டுக்குக் காலையில் முத்தையன் போனபோது, அவன் பெரியய்யா அவனின் வருகையை அங்கீகரிக்காததுபோல் வேப்பங்குச்சை எடுத்து. பல் தேய்க்கப் போனார் அவன் உட்காரக் கூடாது என்பது போல், மடியில் இருந்த கையை எடுத்து, கட்டிலில் ஊன்றினார் முத்தையன் எதையும் பொருட்படுத்தாதது போல் "பெரியய்யா, இந்த வேலுப் பயல் என்னைக் கூலிக்காரங்கிறான் என்னைச் சொன்னாலும் பரவாயில்லை நான் கூலிக்காரன்தான் துள்ளங் கூட்டம் ராமசாமியையும், அவரு தம்பிங்களையும் வாய்க்கு வந்தபடி ஏசுறான்" என்றான்