பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 நாற்பெரும் புலவர்கள் கிறது. எனவே, காரி, தன்னைப்பாடி வருபவர் களிக்கப் பரிசிலைத் தந்தனுப்புபவன் என்பது. தோற்றம். - - - கபிலர் மலையமானிடம் விடைபெற்றுத் திருக் கோவலூரினின்று நீங்கினார். - - கபிலரும் பேகனும் பேகன் என்பவன் கடை ஏழு வள்ளல்களில் ஒருவன். இவன் பொதினி மலையை உடையவன்: ஆவியர் குடியிற் பிறந்தவன். புலவர் இவனை 'வையாவிக் கோப்பெரும் பேகன்' எனவும் வழங் குவர். இவன் வரையாதளிக்கும் வள்ளல். இவ் , வள்ளல் ஒருகால் மலைவழியே செல்கையில் மயிலொன்று தன் சிறகை விரித்து ஆடிக்கொண்டி ருந்தது. அது குளிருக்காற்றாது வருந்தி நடுங் கினது என எண்ணிய பேகன், தர்ன் மேற்போர்த் திருந்த உயர்ந்த பட்டாடை ஒன்றினை அதன் மேற் சாத்திச் சென்றனன். இச்செய்கையால் இவனது த்ரும சிந்தை நன்கறியப்படும். இப்பேகனுக்கு உருவிலும் திருவிலும் சிறந்த மனைவி ஒருத்தி இருந்தனள். அவள் பெயர் கண்ணகி என்பது. பேகன் எக்காரணத்தாலோ அவளைத் துறந்து பரத்தை ஒருத்திபால் அன்பு கொண்டு ஒழுகினன். அதனால் வருந்திய கண்ணகி அரண்மனையில் வாடிக் கிடந்தாள். இவ்வரலாற்றை உணர்ந்த புலவர் பலர் பேகனி' டஞ் சென்று அவனுக்கு நல்லறிவுறுத்தினர். அவர்