உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18. சு.சமுத்திரம்

தாத்தா சொல்றது சரிதான்.கள்ளத்தேங்காயோட வந்ததுக்கும் ஒரு விழா வைக்கலாம்,வைக்கணும்' என்றார் காடசாமி.கூட்டம் கைதட்டி ஆதரவு தெரிவித்தது.

பஞ்சாயத்துத் தலைவர் பரமசிவம், முதல் முறையாக வாயைத் திறந்தார். இதுவரை, மற்றவர்கள் மூலமாகப் பேசியவர், இப்போது சொந்தக் குரலில் பேசினார்.

"இன்னொன்ன ஜனங்க கேக்கணும். நாம இவ்வளவு சிறப்பா விழா வைக்கிறதுக்கு நம்ம ஊர் தெய்வம் காலஞ்சென்ற காளமேகம்தான் காரணம்.நம் ஊர இவ்வளவுதூரம் முன்னுக்குக்கொண்டு வந்தவரு அவருதான். அவருக்கும் பிறந்தநாள் வருது, அந்த சங்கத் தலைவருக்கு ஒரு நினைவு மேடைவைக்கனும்!"

இது வரை எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் காதிலேகேட்டு, வயிற்றிலே எரிந்து கொண்டிருந்த ஒரு "எழுபது வயது முதியவர் தள்ளாமையைத் தள்ளிவிட்டுப் பொறிந்து தள்ளினார்.

"ஏ..மடப்பய மக்கா...அல்ப பயவுள்ளியா...இந்த நாலு விழாவ நடத்தி எப்படியும் நாசமாபோங்கல,ஆனாஅந்த பெரிய மனுஷன் பேரச் சேத்து அவர அவமானப் படுத்தாதீங்கடா".

காடசாமி காட்ட சாமியானார்.

"மாமாவுக்குப் பொறாமை...,நம்மல்ல சின்னவருக்கு நினைவு மேடையா என்கிற வயித்தெறிச்சலு... இந்த பதினெட்டு பட்டிகள்ல நம்ம... காட்டாம்பட்டியை முதல் பட்டியா ஆக்கினவரு காளமேகம் அவருக்கு நினைவு மேடை இல்லன்னா... ஊர் எதுக்கு?”