உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

95

ராக்கம்மாவின் மனம் போர்க்களமானது.இந்த மழையில் விறகுவைத்து அடுப்பு மூட்ட முடியாது. எல்லா விறகு களுமே வாழைத்தண் டுகளாகிவிட்டன. பேசாமல், கடையில் போய் நாலார்ரூபாய்க்கு ஒரு லிட்டர் வாங்கிக் கலாமா... அதெப்படி.. பங்களா அம்மா தப்பா நினைப் பாங்களே. நாக்க புடுங்கற மாதிரி கேட்டா என்னா... பண்ணறது. அப்பால எப்பவுமே துட்டுத் தரமாட்டாங்க.. இந்த பாழாப்போறகிருஷ்ணாயில் எப்ப வரும்... எப்ப வராதுன்னு சொல்லிக்க முடியாது. இதுக்காக காசுசேர்த்து வைச்சாலும். அந்த கஸ்மாலம் அத கள்ளச்சாராயமா மாத்திடும். எப்படியோபேச்சுன்னா பேச்சுத்தான். ஒரே பேச்சுலதான் நிக்கணும். பங்களா அம்மாக்கிட்டே குனிஞ்ச தலையோட போக்கூடாது. சர்த்தான்மே சொல்லிட்டே.. இப்போ...வீட்ல போய் கஞ்சிக்காச்சாத் தானே வேல பார்க்க முடியும். அதுவும் இன்னா மாதிரி வேல. சல்லிக்கல்ல கூடைல சுமக்கணும், ஏணியில் ஏறனும், பசி மயக்கத்துல எடறி விழுந்துட்டா..இன்னாமே செய்யறது.ஆ.. அதுக்காக வார்த்த மாற்தா...! மனுஷிக்கி மானம்தானேமே முக்கியம்."

ராக்கம்மா, உருவமற்று நடப்பதுபோல் நடந்தாள். உறைந்துப் போனவள்போல் சிறிது நேரம் நின்றாள். சூரியன் வேறு நேர் பார்வைக்கு வந்துவிட்டது. இன்றைக்கு மேஸ்திரி கணக்குப் பார்க்கலாமா என்று கேட்கமாட்டான். அவளை நம்பி வேறு சித்தாளை வேலைக்கு வைக்கவில்லை என்றும், இதனால் கட்டிட வேலையே நின்று விட்டதாகவும், அவள் தான் பணம் கொடுக்க வேண்டும் என்றும் பேசுவான்.

ராக்கம்மா, வழி தெரியாமலேயே நடந்தாள். பக்கத்தில் ஒரு நர்ஸரி, பல்வேறு வண்ணச் செடிகளும் மரக்கன்றுகளும் வியாபித்த தோற்றம். வேலி ஓரமாக சாலையை நோக்கி வளைந்தபடி நீண்ட தென்னை மரத்தில் ஒருபழுப்பு ஓலை