68
சு.சமுத்திரம் ❍
தால், டில்லி மேலிடத்திற்கு எழுதிப் போட்டார். விளைவு மை காயும் முன்பே, ஆறு மாதத்திற்கு முன்புதான் பதவிக்கு வந்த என் கட்சிக்காரருக்கு, அந்தமானுக்கு மாற்றல் ஆணை வந்தது. அந்த ஆணை, கடல்மணிக்கு கிடைக்கும் முன்பே, அலுவலகத் தலைவருக்கு, பேக்ஸ் மூலம் அனுப்பப்பட்டது. அவரும் ஐந்து நிமிடத்திற்குள் ரிலீவிங் ஆர்டரை அடித்து, கடல்மணியை, தன் அறைக்கு அழைத்து அந்த ஆர்டரை கொடுக்கப்போனார். உதவி இயக்குநர் பொறுப்புக்களின் கணக்குளை ஒப்படைக்க இரண்டு நாள் அவகாசம் கொடுக்கும்படி என் கட்சிக்காரர் வேண்டிக்கொண்டது நிராகரிக்கப்பட்டது. நாளைக்கோ, மறு மாதமோ.. நிர்வாகக் கணக்கில் தப்பிருந்தால் தானும் பொறுப்பு என்பதால், கேஷ் புக்கை முறையாக ஒப்படைக்க ஒரு நாளாவது கொடுக் கும்படி என் கட்சிக்காரர் அழுதது எந்தக் காதிலும் ஏற வில்லை. ஆகையால் இந்த விடுவிப்பு ஆணையை என் கட்சிக்காரர் வாங்க மறுத்து அலுவலகம் போனால், அவரது அறை சீல் வைக்கப்பட்டிருந்தது.'
வழக்கறிஞர், சிறிது இடைவெளி கொடுத்து தொடர்ந்தார். தனது வீட்டுக்க போனாலோ. சீனிவாசன் கையெழுத் திட்ட ரிலிவிங் ஆர்டர், அவரது வீட்டுக் கதவில் ஒட்டப் பட்டி ருக்கிறது. எனது கட்சிக்காரரின் முப்பதாண்டு கால தூய்மையான பணி, அரைமணிநேரத்தில் அசுத்தப்படுத்தப் பட்டது. ஊழலை சுட்டிக் காட்டியவரை அதற்கு உரியவர் தண்டிக் கிறார். ஆகையால், இந்த ஆர்டரை நிறுத்தி வைக்க வேண்டும். மை லார்ட், தண்டிக்கப்படும் தர்மங்களுக்கு உங்களை விட்டால், வேறு கதி யார். மை லார்ட்."
வழக்கறிஞரின் முதுகுக்குப் பின்னால், கண்ணீரும் கம்பலையுமாய் நின்ற கடல் மணியையே, எல்லோரும் ஒட்டு மொத்தமாகப் பார்த்தார்கள். நீதிபதிகள் கூட அவரை,