சீத்தலைச் சாத்தனார் Ꮧ3 முடிவில் அந்நகரத்தார் கடலாடுதற்குச் சென் றார்கள். அவ்வாறே கோவலனும் மாதவியும் ச்ென் றனர். சென்ற இருவரும் கடற்கரைச் சோலை யில் ஓர் இடத்தில் அமர்ந்தனர். அப்பொழுது கோவலன் மாதவி வைத்திருந்த யாழ்ை வாங்கிப் பலவகைப்பட்ட வரிப்பாட்டுகளைப் பாடினான். அப்பாடல்கள், கோவலன் வேறு மகளிர்பால் விருப்பமுடையவன் என்பதைக் காட்டின. அத னால், மாதவி அப்பாடல்கள், கோவலன் வேறு மகளிர்பால் மெய்யாகவே விருப்பங் கொண்டிலன். மாதவி, அந்த யாழை வாங்கி வரிப் பாடல்களைப் பாடினாள். அவை, அவள், வேறு ஆடவர்பால் நாட்டமுடையாள் என்பதை விளக்கின. ஆனால் மாதவி அத்தகைய இழிந்த எண்ணம் உடைய வளல்லள் : கோவலன் பாடினதற்கு எதிராகத் தானும் பாட வேண்டுமென்ற எண்ணத்தாற்றான் அங்ஞனம் பாடினாள். கோவலன் அவள்மீது வெறுப்புற்று, அக் கணமே அவளை விட்டு நீங்கினான்; நீங்கித் தன் மனையாளை அடைந்தான். அவன் அப்போதே தன். குற்றத்தை உணர்ந்து எளிமை தோன்ற நின்றான். அவன் படும் துன்பத்தைக் கண்ட கண்ணகி, "என்னிடத்து இரண்டு சிலம்புகள் உள: அவற்றைக் கைக்கெர்ண்டருள்க" என்றாள். கோவலன், "நான் மதுரைக்குச் சென்று, இச்
பக்கம்:நாற்பெரும் புலவர்கள்.pdf/15
Appearance