உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

187

நிலைமைக்கு நாங்களும் காரணம்... இதற்கு பிராயச் சித்தமாக எங்கள் தலைமை மயிலை பறவைகளின் அரசான ராசாளியிடம் அனுப்பி இருக்கிறோம்... அந்த ராசாளி, இதோ வரப் போகிறது... சர்க்கஸில் விளையாட்டாகத் துப்பாக்கி சுடுமே பச்சைக் கிளி, அதன் உதவியோடு, இந்தப் பறவைகளையும், அந்த மரங்கொத்திகளையும் ஒழித்துக் கட்டும்"...

அந்த மாமரம், மயில்களை நன்றியோடு பார்த்தபோது, அதன் மேனியில் மரங்கொத்திகள் ஒதுக்கீடு செய்த ஒரு நல்ல சுரங்கத்தில் ஜம்மென்று உட்கார்ந்துள்ள பகல் குருடன் ஆன ஆந்தை, அந்த சுரங்கப் பொந்துக்கு வெளியே முகத்தை மட்டும் நீட்டி கண்களை உருட்டி எச்சரித்தது....

“இந்த மரத்தை பொந்துகளாக்கி சமூக நீதி காக்கும் மரங்கொத்தியை துரத்தி விடலாமென்று மனப்பால் குடிக்காதீர்கள்... பறவைகளின் இனமானம் காக்கும் நான் இந்த ஆளும் பறவையின் விசுவாசி... அதன் கேடயம்... எச்சரிக்கிறேன்"

அந்த மாமரத்தின் எதிரே அணியணியாய், தனித்தனியாய் நின்ற பறவைகள், அந்த ஆந்தையைப் பார்த்து எள்ளி நகைத்தபோது, அந்த மரமோ, வடதிசை நோக்கி கண் போட்டது... அங்கே தூக்கலான இடத்திலுள்ள ராமசாளிக்காக காத்திருந்தது.

ராசாளி வரவில்லை... ஆனாலும் அந்த ராசளி அங்கிருந்த படியே எல்லாபறவைகளுக்கும் கேட்கும்படிதனது முடிவை கத்திக் கத்தி சொன்னது...

"ஏய்...அற்ப மாமரமே... அந்த மரங்கொத்திகள் என் மரியாதைக்குரிய குடும்ப நண்பர்கள்... அவைகளை