32
சு.சமுத்திரம் ❍
பிடித்து தனிப்படுத்தினார்கள். தேவாரமும், தன் மனத்தை ஆக்கிரமித்த வீரப்பனை விரட்டி விட்டு, அதில் அமைச்சர்களை நிறுத்திக் கொண்டு, அவர்களை அம்மனின் முன்னால் நிறுத்த, அவர்களில் நாவலர், எஸ்.டி. எஸ். தவிர்த்த ஏனைய அமைச்சர்கள், தரையில் நெடுஞ்சாண் கிடையாய் விழுந்தார்கள். இதனால், அவர்கள் கால்கள் பக்தர்களின் காலில் பட்டன. அந்தப் பக்தர்கள், தங்கள் கால்களில் விழுந்த கால்களை, கால்நகங்களால் கீறினார்கள். ஆனாலும் அமைச்சர்கள், பிராணன் போவது மாதிரியான வலியை அடக்கி, அப்படியே கிடந்தார்கள். முந்தி எழுந்து பதவி பங்கமாகி விடக்கூடாதே என்ற பயம்... புலவர் மாண்புமிகு இந்திர குமாரி மட்டும், தரையில் இருந்து தலையை மட்டும் தூக்கி, அங்கப் பிரதட்சணம் செய்வதற்கு, இடம் ஒதுக்கித் தரும்படி தேவாரத்தைக் கேட்டார். ஆனால், தேவாரமோ, அவரைப் பார்க்காதவர் போல வேறு திசையை நோக்க, அதன் தொலைவில், திருமதி சுலோசனா சம்பத், காரில் இருந்து தன்னைக் கரையேற்றும்படி கையசைக்க, தேவாரம், அதைக் கண்டும், காணாதவர் போல் வேறு பக்கம் திரும்ப...ஒ... மை காட் அந்தப் பக்கம் ஒட் - இஸ்... திஸ்.மாண்புமிகு...சேடப்பட்டி முத்தையா...தெய்வத்தின் தெய்வத்திடம், தன்னை ஆற்றுப் படுத்தும்படி, தலையாட, கையாட, குரல் கொடுக்க...
தேவாரம், சேடப்பட்டியாரை மீட்பதற்காக ஓடினார். உடனே காவலர்களும் காரணம் புரியாமல் அவர் பின்னால் ஒட, அமைச்சர் பெருமக்கள் கூட்டத்தில் கலந்து காணாமல் போனார்கள்.
என்றாலும், தேவாரமா-சும்மாவா... அத்தனை அமைச்சர் களையும், அரும்பாடு பட்டுக் கண்டுபிடித்து, சேடப் பட்டி-யாரையும் சேர்த்து, கோவிலுக்குப் பின்பக்கம் உள்ள