உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

97

எதிரே வந்த பெண் பட்டாளத்தை பார்த்து விட்டு, ராக்கம்மா நின்றாள். அவர்களிடம் ஆறுதல் தேடி கிருஷ்ணாயில் சமாச்சாரத்தை சொல்வது போல், கையிலிருந்த கேனை தலைகீழாகப் பிடித்தபடி தூக்கிப்போட்டுப் பிடித்தாள். ஆயா கேட்டாள்...

"இன்னிக்கும் கிருஷ்ணாயில் இல்லனுட்டானா..?"

"இன்னிக்கி மட்டுமல்ல என்னிக்கு வரும்னும் சொல்ல மாட்டேங்கறான் கஸ்மாலம்...! நாளிக்கும் சேர்த்து இன்னிக்கே கை விரிச்சுட்டான். இந்தப் பசங்க, பேசாம நமக்கெல்லாம் எதுவும் கிடையாதுன்னு பப்ளிக்கா சொன்னா தேவலை. இப்படி நாயா அலையாம நாம நம் வேலைய கவனிக்கலாம்."

இந்த சமயத்தில், சுமதி கண்களை சிமிட்டியபடியே ராக்கம்மாவிடம் கேட்டாள். 'ஏய்..ராக்கு..அந்த கடையோட சைடுல சைக்கிளுங்க நிக்குதா.. அதுல பெரிய பெரிய கேரியருங்கதோ.. பராக்குப் பார்க்கிறது மாதிரி நாலஞ்சு கம்மாண்ணாட்டிங்க நிக்கறானுவளா... அதுல ஒருத்தன் வழுக்கத் தலையா..? இன்னொருத்தன்அம்ம தளும்பனா'

ராக்கம்மா யோசித்துப் பார்த்தாள். நிசம்தான். நாலைந்து பேர் நின்றார்கள. கடைக்கு வெளியே ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக அவர்கள் நிற்பதும், அவர்களின் ஒருத்தன் அவ்வப்போது கடைக்கு முன்னால வந்து நோட்டம் பார்த்ததும் அப்போது அவளுக்கு புரியவில்லை. இப்போது தெரிந்தது. அவர்கள் நிற்பதற்குரிய அர்த்ததை அறியும் வகையில், அவள் சுமதியை அர்த்தத்தோடு பார்த்தாள். சுமதி விளக்கினாள்.

"இந்தப் பசங்களுக்கும், கடைக்கார கம்மானாட்டிங்

7.