உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

135

"ஒங்க தங்கைக்கு இது தலை தீபாவளி... நாம்தான் அவளுக்கு அப்பாம்மா...'பிளஸ்-டூ படிச்சது போதுமுன்னு நிறுத்திட்டீங்களே-நம்ம வீட்டு எரும மாடு-அவள் குதியாய் குதிக்கிறாள்-கம்யூட்டர் கோர்ஸ்லயாவது சேர்க்கணுமாம்... இந்த வீட்டு நிலைமையத்தான் சொல்றேன்... ஒங்க தீபாவளி மலர் கதைகளுக்கு வரப்போற அன்பளிப்புப் பணம், இந்தச் செலவுல இருபதுல ஒரு பங்குக்கு கூட தேறாது... கதை எழுதுற சமயத்தில எட்டாயிரம் ரூபா பணத்த புரட்டுங்கன்னுதான் சொல்ல வாறேன்... இல்லாட்டால், நாத்தனார் கொடுமைன்னுதான் என்னைச் சொல்லுவாங்க... நான் பேசுறதக் கேட்க வேண்டியது ஒங்க உரிமையா இல்லாட்டாலும், சொல்ல வேண்டியது என் கடமை..."

அந்தம்மா, ஒரு ஈயப் பாத்திரத்தை, எவர்சில்வர் அகப்பையால் இடித்தபோது, மயில்நாதன் மோவாயைத் தடவியபடியே வெளியே வந்தார்... சமையலைறைக்குள் தன்னை சிறுமைப்படுத்துவதாக நினைத்துப் பொங்கிய கோபம், அவள் மீது அனுதாபமாகவும், அங்கே ஏற்பட்ட சுய-இரக்கம் இப்போது சுய கோபமாகவும் மாறின. ஒரு நல்ல நாவலாசிரியர் என்ற முறையில், அந்தம்மாவை அவளுடைய தளத்திலேயே நிறுத்திப் பார்த்தார். அவள் சொன்னது நியாயமாகவே பட்டது. அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகளில் மிளிர்ந்த இலக்கிய நயம் அவர் உதடுகளில் ஒரு வெள்ளைக் கோட்டைப் போட்டது...

கலிங்கன் தன்னைப் பார்த்து சிநேகிதமாய்ச் சிரித்த எழுத்தாளர் மயில்நாதனை புரிந்து கொண்டான். அவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆனந்தமாகக் கூவினான்.

"எக்கா... போயிட்டு வாறோம்... புறப்படுங்கண்ணே..."

அந்த நட்சத்திர ஹோட்டலில், மூன்றாவது மாடிக்குப்