❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
63
கடல்மணி, வக்கீல்கள் இருக்கைகளை நோட்டமிட்டார். 'மாப்பிள்ளையை காணவில்லை. 'மாப்பிள்ளை எங்கே" என்று, மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டார். ஒரு வாதிக்கோ அல்லது பிரதிவாதிக்கோ, வழக்கறிஞர்தான் 'மாப்பிள்ளை'..அதே முறுக்கு.. அதே வரதட்சணை.. அதே 'மற்றும் பல இயல்பிலேயே ஆரோக்கியமான ரசனைக்காரரான கடல்மணி, தனது உவமையை எண்ணி தானே சிரித்துக் கொண்டார். பிறகு நாம் கெட்ட கேட்டுக்கு, சிரிப்பு ஒரு கேடா என்று வாயை மூடாமலே, மனதை மூடிக்கொண்டார். ஆனாலும், அவர் பட்ட அவமானமும், நடத்தப்பட்ட விதமும், வாதைகளாக மனதில் முட்டி மோதின. அதே சமயம் தனது 'மாப்பிள்ளை நல்லவர் என்பதாலும், காசுவாங்கக்கூட மறுத்துவிட்டார் என்பதாலும், மனிதாபிமானம் இன்னமும் இருக்கிறது என்பதில் ஒரு ஆறுதல்.
கடல்மணி, தன்னை தோளில் தட்டுவதைப் பார்த்து நிமிர்ந்தார். அலறியடித்துஎழுந்தார். எல்லோரும் எழுந்த நிற்கிறார்கள். வடநாட்டுக்காரி என்பதாலோ என்னமோ, அவர் தோளைத் தட்டிய பைஜாமாக்காரி, அவர் தோளில் இருந்து கையை எடுத்துவிட்டு, மோவாயை முன்னோக்கி விட்டு, கண்களை எம்ப வைத்து பரிமொழியாய் பேசுகிறாள். அவள் காட்டிய நீதி மேடையில், இரண்டு நீதிபதிகள் உட்காருகிறார்கள். சிவப்புப் பார்டர் போட்ட கறுப்புச் சிலுக்கு கவுன்மாதிரியான கோட்டுப் போட்டவர்கள். உள்முகமாய் பார்ப்பது போன்ற பார்வை. நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டதுபோல், எவரையும் குறிப்பிட்டுப் பார்க்காமல், எல்லோரையும் பார்க்கும். ஏதிலாப்"பார்வை.
கடல்மணி, தன் பக்கத்தில் நிற்கும் சீனிவாசனையும், அவரது அலுவலக சகலைகளையும், ஆச்சரியமாய் பார்த்தார். எப்போது வந்தார்கள். நீதிபதிகள் வந்தவுடனே எழுப்பி