உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

சு.சமுத்திரம்❍

தாக்குப்பிடிக்க, காவல்துறையினர் நன்றாகத்தான் திட்ட மிட்டிருந்தனர். டி.ஜி.பி. ரீபாலும், கூடுதல் டி.ஜி.பி. தேவாரமும், பரிவார போலீஸ் தேவதைகளோடு அங்கேயே முகாமிட்டனர். அதோடு மாவட்டந்தோறும் இருந்து கூடுதல் காவல் படைகளை வரவழைத்திருந்தார்கள். ஆனாலும் முதல்வர் அவர்கள், அவசர அவசரமாய் டில்லி போவதால், அவரைப் பாதுகாப்பாய் அனுப்பி வைப்பதற்கு, பூரீபால், பாதிப்போலீஸ் படையுடன் சென்னை போய்விட்டார். போதாக் குறைக்கு, கன்னியாகுமரி மாவட்டத்தில், இன்னும் இரண்டு மாதத்தில் மாண்புமிகு புரட்சித் தலைவி சுற்றுப்பயணம் செய்யப் போகிறார் என்ற சேதியை உள்துறைச் செயலாளர் அந்தக் குக்கிராமத்திற்கு எப்படியோ தெரியப்படுத்த, எஞ்சி இருந்த காவலரில் பாதிப்பேரை, ஒரு ஐ.ஜி. இழுத்துக்கொண்டு நாகர்கோவில் போய்விட்டார்; எஞ்சிய போலீஸ்படை, கூட்டத்திற்குப் பயந்தது. ஒரு பயந்தாங்கொள்ளி எப்படி நடந்து கொள்வானோ அப்படி நடந்துகொண்டது -அதாவது எங்கு பார்த்தாலும் லத்திக் கம்பு வீச்சுக்கள்; கூட்டத்தினரின் அம்மாக்களையும், அக்காக் களையும் விமர்சிக்கும் கெட்ட கெட்ட வார்த்தைகள்.

என்றாலும், கூடத்தினர் குங்குமம் கொட்டலைப் பார்ப்பதில் குறியாய் இருப்பதால், போலீஸ் கொட்டலைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதோடு சிறு குழுந்தைகளுக்கு ஊசி போடும் போது, டாக்டர் பேச்சு கொடுத்து கவனம் கலைப்பாரே, அப்படி, போலீஸ்தனத்தை உதாசீனப்படுத்தும் அளவிற்கு, இதரக் கவர்ச்சிகளும் இடம் பெற்றன. மாண்புமிகு ஜெயலலிதா அவர்களின் கோபுரம் தாண்டிய கட்-அவுட்டுக்கள்; அவற்றின் மேல் பக்கம் அந்தப் பகலிலும் அணைந்து, அணைந்து எரியும் கலர் பல்புக்கள்;