180
சு.சமுத்திரம் ❍
அந்த மாமரம், தன்னை அசத்திய அந்த மரங் கொத்தியைப் பார்த்து, லேசாய் அசந்து போனது உண்மைதான். ஆனாலும் சுதாரித்துக் கொண்டு, இப்படிப் பதில் அளித்தது.
‘'நீ சொன்னது பறவையியல் நிபுணர் கருத்து. நான் சொல்லப் போவதோ, தாவர விஞ்ஞானி கருத்து. உங்களில் ஒவ்வொரு மரங் கொத்தியும், மணிக்கு ஆறாயிரம் பட்டைத் துண்டுகளை என்னிடமிருந்து பிய்க்கிறது... இந்த ஐந்தாண்டு காலத்தில் நீங்கள் எவ்வளவு பட்டைகளை உரித்திருப்பீர்கள்? நீயே கணக்குப் போட்டுப் பார்... தலைமை மரங்கொத்தியே'
துளை போட்டுக் கொண்டிருந்த, தொண்டு மரங் கொத்திகள், அந்தச் சுரண்டலை விட்டு விட்டு, “எங்கள் தலைவியையா எதிர்த்துப் பேசுகிறாய்' என்று கடிந்து பேசி, அந்த மரத்தின் மாம்பழங்களை பிய்த்துப் போட்டன... காய்களைக் குத்தின... இலைகளை பிடுங்கி எறிந்தன... பூக்களை கசக்கின.
தலைமை மரங் கொத்தியோ, அவற்றைக் கண்டுக்காமல், அந்த மாமரத்திற்கு, தான் செய்த அரும்பெரும் பணிகளை சொல்லிக் காட்டியது.
"உனக்குச் சிறிதேனும் நன்றி இருக்கிறதா மாமரமே..? உன் உச்சிக் கிளைக்கு ஆகாயம் துழாவி’ என்று பெயர் வைத்தது நான்... உன் வலது கிளைக்கு 'பூமி துழாவி’ என்று பெயர் வைத்ததும் நான்... உன் அடிவாரத்திற்கு'மாண்புமிகு மரங்கொத்தி தாங்கி" என்று பெயர் வைத்து, உன்னை இந்தத் தோப்பறியச் செய்திருக்கிறேன். இனிமேல் உன்னுடைய ஒவ்வொரு கொப்புக்கும் எவர் வாயிலும் நுழைய முடியாத புதுமையான பெயர்களைச் சூட்டப் போகிறேன்...
மாமரம் பதறிப் பதறி மன்றாடியது.
"வைத்தது போதும் மரங் கொத்தியே... என் கிளைகள்