❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்
151
"முதுபெரும் சிவபக்தா... சைவப் பெருமுனியே... நீ... ஈஸ்வர எல்லையைத் தாண்டி வர, என்னிடம் என்ன இருக் கிறது? ஒரு வேளை சோதிக்க வந்தாயோ... அதற்கு என்றே நாரதன் இருக்கிறானே..."
'விளங்கிய அறிவின் முனைவன்' என்று தொல்காப் பியரால் பயபக்தியுடன் பாடப் பெற்ற, தமிழிற்கு முதல் நூல் தந்த அகத்தியர், இப்போது சிறிது சூடாகவே கேட்டார்.
'சோதிக்க வரவில்லை பிரபு... சாதிக்க வந்தேன்... என் தமிழ் இனத்தை மீட்க வந்தேன்... ஆனாலும் இது உங்களுக்கு ஆகாது அனந்தனே... என் மக்கள் மீது உங்களுக்கு ஏன் இத்தனை வெறுப்பு... ஏன் இத்தனைக் கோபம்..."
ஆதிகேசவன், ஒரு பாசாங்குப் புருவச் சுழிப்போடு பதிலளித்தார்.
"உன் தமிழ் இனத்தின் மீது கோபமா... வெறுப்பா... எனக்கா... எப்படி இருக்க முடியும் முனிபுங்கவா... நாவலந் தீவிலேயே நல்ல இனமான உன் தமிழ் இனத்தில் ஒரு பகுதியினர், என் ராமாவதாரத்தை காலணியால் அர்ச்சித் தவர்கள்; இப்போது கூட, என்னை வசை பாடுகிறவர்கள்... வம்புக்கு இழுக்கிறவர்கள், என்னை ஈனப்படுத்தும் இந்த 'இனமான தளபதிகளைக் கூட வசதியாகத்தானே வைத்திருக் கிறேன். இவர்கள் மீது பகை கொள்ளப் போன அரசின் மனப்போக்கை மாற்றி... அந்த அரசு மூலமே விருது கொடுக்கச் செய்தேன். பெட்டி கொடுக்கச் செய்தேன். இப்படிப்பட்ட எனக்கு உன் இனத்தின் மீது கோபம் என்கிறாயே... நன்று அகத்தியா நன்று..."
"நீங்கள்தான்... எம் மக்களை நிசமான பிரச்சினைகளில் இருந்து திசை திருப்பி விடுகிறீர்கள் என்பதற்கு, உங்கள்