உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒரு மாமரமும் மரங்கொத்திப் பறவைகளும்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❍ ஒரு மாமரமும் பல மரங்கொத்திப் பறவைகளும்

155

"அப்படி என்றால்..."

"அதை என் வாயால் சொல்ல மாட்டேன் வைகுண்ட நாயகியே... கலை என்ற தேனை மேலோட்டமாக சுவைக்க வேண்டி எம் மக்கள், தேனுக்குள் விழுந்து சிறகிழக்கும் ஈக்கள் போல் பகுத்தறிவை இழந்துவிட்டார்களே பரந்தாமன் தேவியே..."

தாயார் தன் கணிப்பைத் தெரிவித்தார்.

"உன் மக்கள் கலைத்தேனில் விழவில்லை... விஷத் தேனில் விழுந்து கிடக்கிறார்கள்... பிரபோ!... அகத்தியன் சார்பில் அடியாள் சொல்லும் விபரத்தையும் கேளுங்கள். தொலைக்காட்சிக்காரர்கள், தமிழர்களை பிச்சைக்காரர்களாய் ஆக்கிவிட்டார்கள். போட்டிகள் என்ற பேரில், பரிசு பரிசு என்று பார்ப்பவர்களை, கண்ணேந்து வதற்குப் பதிலாய் கையேந்த வைத்துவிட்டார்கள். அதுவும் டப்பாப் பரிசுகளைக் கொடுத்து, வாங்கியவர்களை அதிர்ஷ்டசாலிகள் என்று அழைத்து, அதிர்ஷ்ட லட்சுமியான என்னைக் கொச்சைப் படுத்துகிறார்கள்... ஒரு பக்கம் இந்த நிலை... மறுபக்கமோ, சில ஆஸ்பத்திரிவாசிகள் என்னை சூட் கேஸ்களில் சிறைசெய்து, வெளிநாடுகளுக்கு அனுப்புகிறார் கள்... எந்த மக்களிடம் நான் இருக்க வேண்டுமோ, அந்த மக்கள் பிச்சைக்காரர்களாய் ஆக, நானோ ஆட்சியாளர்களிட மும், ரெளடியார்களிடமும் சிறைபட்டுக் கிடக்கி றேன்... எப்படியாவது என்னை மீட்க வேண்டும் பிரபுவே..."

நாரணன், தன் நாயகியை அனுதாபமாய் பார்த்தபோது, நீரடியில் ஒரு சலசலப்பு... ஆதிகேசன், ஆயிரம் தலை களையும் திருப்பியபோது, நீராரும் கடலுடுத்து, நில மடந்தைக்கு எழிலான ஒரு சீரிளம் பெண் தோன்றினாள்...