உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி

தாற்காலிகமாக மீட்டெடுத்த ஊமைத் துரைக்காக படையோடு சென்று கோட்டையில் ஏறி, அந்தக் கோட்டையைச் சுற்றி வெள்ளையர்கள் வைத்த வெடி மருந்தில் தனது உடம்பு முழுவதும் . வெண்ணெயைத் தடவி வெடி மருந்துகளின் விபரீதங்களை தவிர்த்து உயிர்த் தியாகம் செய்த ஆதி திராவிட வீரன் சுந்தரலிங்கத்தையும், சித்தர் மரபு வழியில் வந்த சாதிய மறுப்பாளர் குணங்குடி மஸ்தான், சாஸ்திரக் கும்மி எழுதிய வேதநாயகம் சாஸ்திரி, தோள் சீலைப் போராட்டத்தை துவக்கிய மீட் பாதிரியார் சாதிப் பேரால் கையெழுத்துப் போட மாட்டேன் என்று பிரகடனப் படுத்திய தேவர் இனத்தைச் சேர்ந்த, அந்தக்காலத்து மதுரை ஜில்லா போர்டு தலைவரான ராமச்சந்திரனாரையும், தந்தை பெரியாரை எடுத்து ச் செல்வதுபோல் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

எத்தனையோ சிலைகளுக்கும், நினைவு மண்டபங்களுக்கும் கோடி கோடியாய் பணம் கொட்டும் அரசு, இந்தப் போராளிகளை குறும்படங்கள், கூத்துக்கள், வில்லுப்பாட்டு, வீதி நாடகம், நாட்டுப்புற இசை போன்ற கலை நிகழ்ச்சிகள் மூலம் சாதாரண மக்களிடம் அறிமுகப்படுத்த வேண்டும். ஆமாம் அறிமுகம் தான். ஆழப்படுத்தல் அல்ல. காரணம், இன்று சாதியின் பேரால் சண்டையிடும் தலைவாங்கித் தமிழனுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. இது, இவனுடைய குற்றமும் அல்ல. இவர்களைத் தெரியப்படுத்தாத வரலாற்றின் குற்றம். நமது குற்றம். அரசின் குற்றம். இந்த முப்பெருங் குற்றங்களை நீக்குவதோடு, இதற்கு எதிர் வினையாய் ஆக்க ரீதியான செயல்களை அனைவரும் மேற்கொண்டால் சாதிச் சண்டைகள் போகிறதோ இல்லையோ குறைந்தது குறையும்.

இதன் முதல் கட்டமாக தமிழகத்தின் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், சிந்தனையாளர்கள், பேராசிரியர்கள் ஆகியோரைக் கொண்ட வள்ளலார் மனித நேயப் பேரவை என்ற ஒரு அமைப்பு அண்மை யில் சென்னையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மூலம் வள்ளலாரை மட்டுமல்லாது, அவருக்கு முன்னால் வாழ்ந்த வைகுண்டர் முதல் பின்னால் வாழ்ந்த தந்தை பெரியார் வரை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே இதன் நோக்கம். என்றாலும், இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் எல்லாம் வல்ல அரசிற்கே பெரும் பொறுப்பு உள்ளது.

தினமணி நாளிதழ்-1999

(தலையங்க பக்கக் கட்டுரை)