பக்கம்:சமுத்திரம் கட்டுரைகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ஆன்மீகப் போராளி வைகுண்டசாமி

இல்லாத அத்தனை எளிய மக்களும் இந்தக் கோவில் குளத்தில் குளித்து விட்டு, வைகுண்டரின் வேண்டுகோளின் படி கொண்டுவந்த அரிசி, பருப்பு வகையறாக்களை சமைத்து இவரது முன்னிலையில் ஒன்றாக உண்டு மகிழ்ந்திருக்கிறார்கள்.

இப்போது, தமிழக அரசு சாதியச் சண்டைகளை தீர்ப்பதற்கு சமத்துவபுரங்களை அமைத்து வருகிறது. கலைஞர் இதற்கு பெருமுயற்சி எடுக்கிறார். ஆனால், எங்கேயோ ஒரு மூலையில் ஒரு சாமானியனாய்ப் பிறந்த வைகுண்டரோ அனைத்து அவர்னர் சாதிகளும் ஒன்றாக ஒரே இடத்தில் வீடுகட்டி வாழ்வதற்கு வழி செய்திருக்கிறார். ஒடு வேய்ந்த வீடுகளை எளிய சாதியினர் கட்டக்கூடாது என்று மேட்டுக் குடியினரும், அவர்களுக்காகவே ஆட்சி செய்த அரசும் கொடிய சட்டத்தைப் போட்டிருந்தபோது, வைகுண்டர் இதற்கு சவால் இடுவதுபோல் முட்டம்பதி என்ற இடத்தில் அனைத்துச் சாதி களையும் கொண்ட ஒரு குல குடியிருப்பை நிறுவியிருக்கிறார். ஆனாலும் யாது காரணத்தாலோ இந்த குடியிருப்புக்கள் பரவலாகவில்லை.

தோள் சீலைப் போராட்டம்

எல்லாவற்றிற்கும் மேலாக எளிய சாதிப் பெண்கள் ஆடு மாடுகளைப்போல் இடுப்புக்கு மேல் எதுவுமின்றி அலைந்து கொண்டிருந்த காலத்தில் - அதுவும் அண்மையில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் மேலாடை போட்டு வாழ்ந்த பெண்கள்கூட கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்யாணமாகி விட்டால் மேலாடையை எடுத்துவிட வேண்டும் என்ற விதிவிலக்கில்லாத கொடுரச் சட்டம் இருந்தபோது, இத்தகையப் பெண்களுக்கு சுய மரியாதையைக் கொடுத்தவர் வைகுண்டர். இவருக்கு முன்பே மீட்பாதிரியார் போன்ற கிறிஸ்தவ மத போதகர்கள் அந்த மதத்தில் சேர்ந்த பெண்களை குப்பாயம் போட வைத்து, அதனால் எழுந்த தோள் சீலை போராட்டத்திற்கு தலைமை தாங்கியிருக்கிறார்கள்.

மூன்று கட்டங்களில் முப்பத்தேழு ஆண்டுகள் நடந்த கன்னியாகுமரி பகுதி பெண்களின் தோள் சீலை போராட்டத்தின் இறுதிக் கட்டம் அழுத்தம் பெறவும், எளிய சாதி இந்துப் பெண்கள் அதில் ஈடுபடுவதற்கும் வைகுண்டரின் தாக்கம் முக்கிய காரணம். நமது பெண்ணியவாதிகளுக்கும், பெண்ணிய இயக்கங்களுக்கும் தெரியாத இந்த தோள்சீலை போராட்டம் சிவகங்கை வரை வந்துள்ளது. எளிய சாதியைச் சேர்ந்த ஏராளமான ஆடவர்களும் பெண்களும் இதற்காக உயிர்ப் பலியானார்கள். நீதி மன்றங்கள் கூட இந்த தோள் சீலை