பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 சில காரியங்கள் ஆமை வேகத்தில் துவங்கி, மின்னல் வேகத்தில் முடியும். சில மின்னல் வேகத தில் துவங்கி ஆமை வேகத்தில் முடியும். ஆனால் மோகினியின் திருமணம் மின்னல்போல் தோன்றி, மின்னல்போல மறைந்தது. அவள் கழுத்தில் தாலி ஏறுவதற்காவது ரிஜிஸ்டர்ட் ஆபீஸ் அப்புறம் கோயில் குளம் என்று சிலவாரம் ஆகியது. ஆனால் ஏறிய தாலி இறங்க அவ்வளவு நாள் கூட ஆகவில்லை. மோகினியின் கழுத்தை நெறித்துக்கொண்டிருந்த சீனிவாசன், அவள் கழுத்தை விட்டுவிட்டு, தன் கழுத்தைக் குத் திக்கொள்வதற்காக கத்தியையோ அரிவாளையோ ஒடிக் கண்டுபிடித்து எடுத்தபோது உள்ளே ஓடிவந்த மோகினியின் அப்பா ஏகாம்பரம் கொலகாரன்... கொல பண்றான். கொல பண்றான்' என்று கத்த, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கூடி அவனை நீயும் மனுஷனா" என்று கேட்க, தான் உண்மையிலேயே மனுஷன் இல்லை என்பதை அவர்கள் சொல்வதற்கு முன்பாகவே உணர்ந்திருந்த சீனிவாசன் மெளனமாக வெளியே போகப்போனான். அப்போது, 'என் பொண்ணுக்கு மூணு மாசம்... அவளுக்கும் அவள் குழந்தைக்கும் ஒரு வழி சொல்லிட்டுப் போடா, என்று மரியாதைமிகு மாமனார் சொல்வதையும் பொருட்படுத்தாமல், ஹார்ட் அட்டாக்கில் இறந்துபோன அப்பாவிற்காக வேகமாக இயங்கிய தன் இருதயம் இப்போது இயங்காததுபோல் இயங்க, அவன் பரி தா. ப ம க வெளியேறினான்.