6 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் "பின்ன என்ன ஸார்! மூணு வருஷத்திற்கு முன் னாடியே இதை நீங்க யோசித் திருக்கணும். சின்ன வயசில இருந்து ஒன்னா பழகுன என் மாமா பையன். என் பின்னா லயே சுற்றிக்கிட்டு இருந்தாலும், அவன்மேல பாசம் வருதே தவிர , ஆசை வர்ல! ஒங்கமேலேகூட எடுத்த எடுப்பிலேயே எனக்கு எதுவும் வர்ல! உங்க மறந்துபோற நினைவுக்காக நம் சந்திப்பின் துவக்கத்தை நான் சொல்றேன். அப்புறம் முடிவையோ அல்லது முடிவு கட்டுறதையோ நீங்க சொல்லுங்க. ஒங்க கம்பெனி, என் காலேஜ் பக்கத்துலேயே இருக்கது என் தப்பில்ல. அங்கே, ஒரு அட்டெஸ்டேஷனுக்காகவும், டிராமா ஸ்கிரிப்டை டைப் அடிக்கவும் நான் வந்ததுதான் தப்பு. பத்து பக்கம் டைப் அடித்த உங்களுக்கு நான் பத்து ரூபாயை நீட்டியபோது, என்னை கோபத்தோடு முறைச் சதையும், நான் உடனே கூட ஐந்து ரூபாயை நீட்டியதும், நீங்க என்றைக்கும் உதவிக்குப் பிச்சை போடாதிங்க' என்று சொல்லி, ரூபாயை திருப்பிக் கொடுத் திங்க. அதனால் தானோ என்னவோ, அதுல வந்த காதலையும் திருப்பி எரியுறிங்க. "ஓங்களைவிட ஒங்களோட மனப்போக்கும், நல்லதோ கெட்டதோ...உங்களுக்குன்னு இருக்கிற பிரின்ஸ்பிள்களும், எனக்கு பிடிச்சுப்போச்சு! படிப்படியா உங்களைக் காதலிக் கிறது தெரியாமலே காதலிச்சேன். அப்பா மாமா பையனை ஃபிக்ஸ் பண்ணப் போனபோதுதான், ஒங்கமேல உயிரையே நான் வச்சிக்கிட்டு இருக்கிறது எனக்கு புரிஞ்சுது. ஒடோடி வந்து ஒங்ககிட்டேயே நான் முறையிட்டேன். அப்போ வாவது நீங்க எனக்கு புத் திமதி சொல்வியிருக்கலாம்: நான்தான் உங்களிடம் வலியப் பேசினேன் என்கிறதை மறக்கலே! நான்தான் உங்களுக்குக் காதல் நிர்பந்தம் கொடுத்தேன் என்கிறதையும் நான் நினைக்காமல் இல்ல. அதேசமயம் உங்களுக்கு என்மேல் காதல் இல்லங்கறதை அப்போதே சொல்லியிருக்கலாம்.
பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/16
Appearance