உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெருப்புத் தடயங்கள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

தொடர்ந்து வெளியிடுவதால், மிகப் பெரிய வாசகர் குழுவினையும் எழுத்தாளருக்கு மதிப்பினையும் பெருகச் செய்வதுடன் படைப்பதற்கு ஊக்கத்தையும் அளிக்கிறது. நல்ல பதிப்பகங்களே நல்லாசிரியரை இனங்கண்டு நாட்டிற்கு அறிமுகப்படுத்த முடியும். ஆசிரியரின் தொண்டு தொடர்வதற்குத் துணையாக நிற்கும்.

சுத்தானந்த பாரதியாருக்கு ஓர் அன்பு நிலையமும், வெ.சாமிநாத சர்மாவுக்கு பிரபஞ்சஜோதி பிரசுராலயமும், பாவேந்தர் பாரதிதாசனருக்கு செந்தமிழ் நிலையமும் பேரறிஞர் அண்ணுவுக்குத் திராவிடப் பண்ணையும். ம. பொ. சி அவர்களுக்கு பூங்கொடிப் பதிப்பகமும், தமிழ் வாணனுக்கு மணிமேகலைப் பிரசுரமும், வாரியாருக்கு வானதி பதிப்பகமும், அறிஞர் மு. வ. வுக்குப் பாரி நிலையமும், சிந்தனையாளர் ஜெயகாந்தனுக்கு மீனாட்சி புத்தக நிலையமும் களமாய் தளமாய் அமைந்தது போல, சமுத்திரம் அவர்களுக்கு மணிவாசகர் பதிப்பகம் இலக்கிய மேடையாக அமைந்துள்ளது.

'நான் வரவேற்கும் இலக்கியப் போக்குகள் கொண்ட படைப்புக்களை விரிவாக விமரிசனம் செய்வது என் வழக்கம். உணர்ச்சிக்கு ஆரோக்கியமான உணவாகவும் அறிவெல்லையை விஸ்தரிக்கிற சமூக ஆய்வாகவும் ஒரளவேனும் விளங்கினால் அக்கலைப் படைப்பை நான் வரவேற்பேன். சமுத்திரத்தின் கதைகள் பொதுவாக தற்காலச் சமுதாய அமைப்பின் முரண்பாடுகளையும் அவற்றின் நியாய அநியாயங்களையும் அலசிப் பார்க்கிற சமுதாய ஆய்வு நிரம்பியதாக உள்ளது. இவ்வாய்வின் விளைவுகள் கற்பனை, கலையுணர்வு, கலைத்திறன் ஆகிய ஊடகங்களின் வழியே கலைப்படைப்பாகின்றன. ஒரு தத்துவார்த்தக் கண்ணோட்டம் இருப்பதால் இப்படைப்புக்கள் வக்கரித்து நிற்பதில்லை. புற உண்மைகளை கலை உண்மைகளாக மாற்றுவதில் வெற்றி பெறுகின்றன' என டாக்டர் நா. வானமாமலை