பக்கம்:மயக்கம் தெளிந்தது.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91

91

உஷாரா இல்லாட்டி, நேத்தி ரவக்கி அவரைக் கொன்னு போட்டிருப்பியே. ஏன் ய்யா, உனக்கு இந்த கெடு புத்தி?’

ஆறுமுகத்திற்கு பொசுக்கென்று கோபம் வந்தது. அத்தெக் கேக்க நீ யாருடி? இப்பக்கூட அந்தப் பலவேசத்தைச் சவுக்குத் தோப்பிலே கழுத்தை நெரிச்சுப் போட்டுத்தான் வந்திருக் கேன். நல்லா, வசமா மாட்டிக் கிட்டான். அடிச்ச அடியிலே ஆளையே தீர்த்திருப்பேன்-இந்த கட்சி மாறிப் பசங்க குறுக்கே புகுந்து காரியத்தைக் கெடுத்துட்டானுக. இல்லாட்டீ...” என்று ஆறு முகம் பேசிக் கொண்டே போவதைக் கேட்டு பூவாயி ஒருகணம் பதறிப் போனாள்.

'அடப்பாவி...அதுக்குத்தான் ரெண்டு நாளா. வீட்டுப்பக்கம் கூடத் தலை காட்டாமே, தலை மறைவா சுத்திக்கிட்டிருந்தியா? பாவி... நீ உருப் பிடுவியா! உன்னை அவரு அன்னிக்கே போலீ சிலே பிடிச்சுக் கொடுத்திருந்தா; அந்த நல்ல மனுஷனுக்கு இந்த கதி வந்திருக்குமா ஐயோ... நான் இப்போ என்னத்தேச் செய்வேன்... அவரு மொவத்திலே போயி எப்படி முழிப்பேன்...” என்ற பூவாயி அழுதபோது ஆறுமுகத்திற்கு ஆத்திரம் பற்றிக் கொண்டு வத்தது.

எட்டி அவள் தலை மயிரை கொத்தாய்க் கையில் பிடித்துக் கொண்டான். குழந்தை