* - 4 கட்டுரைகள் ஏற்பட்டுவந்த மாறுதலைக் காட்ட ஒரு திருஷ்டாக்தம் கூறுவோம். கல்கத்தா சர்வகலாசாலைக்கு வாழ்நாள் முழுதும் உழைத்து, கல்வி அபிவிருத்தியில் பேரபிமானம் கொண்டிருந்தவர் ஆஷாடோஷ் முகர்ஜி. அவர் தம் வீட்டில் பெரிய அதிகாரிகளைக் காணும் பொழுது சட்டையும் அங்கவஸ்திரமும் இல்லாமலே அமர்ந்து பேசுவது வழக்கம். உருவமோ குட்டி யானை போன்று இருக்கும். அதிகாரிகளுக்குப் பிடிக்கவில்லையானல் அங்கு வரவேண்டாமே என்று எண்ணிக்கொண்டார் போலும்! அவர் ஒரு சமயம் ரயிலில் முதல் வகுப்பில் பிரயாணஞ் செய்யும் பொழுது ஆசனத்தில் படுத்து உறங்கிக் கொண்டு இருந்தார். ஒரு ஸ்டேஷனில் இரண்டு ஐரோப்பியர் அந்த வண்டியுள் ஏறி, ஹால் தி டெவில் இஸ் திஸ்? ' என்று சத்தமிட்டுப் பார்த்தனர். முகர்ஜி எழுந்திருப்ப தாய்க் காணுேம். ஆல்ை, பக்கத்தில் மாட்டப்பட்டிருந்த அவருடைய குடையை அந்த ஐரோப்பியர் எடுத்து வெளியே எறிந்துவிட்டு, தங்களுடைய சட்டைகளைக் குடை யிருந்த கொக்கியில் மாட்டி வைத்துவிட்டு, எதிர்ப் பக்கத்து ஆசனத்தில் அமர்ந்தனர். முகர்ஜி சாந்தமாக எழுந்திருந்து, அந்தச் சட்டைகளை எடுத்து ரயிலுக்கு வெளியே எறிந்துவிட்டு, மறுபடி படுத்துக்கொண்டார். காரணம் கேட்கப்பட்ட பொழுது, அவர் முன்னிலும் நிதானமாக, ஒன்றுமில்லை - அவை என் குடையை எடுத்துவரப் போயிருக்கின்றன ! . என்ருர். இதைப் போலவே, வாழ்வாவது மாயம் - இது ம ண் ணு வ து திண்ணம் என்று வேதாந்தம் பேசிக்கொண்டு இருந்த ஜனங்களுக்கு, இந்த மண்ணுய்ப் போகிற வாழ்வுக்கும் சில பொருள்கள் வேண்டும்; அவை சுதந்திரமும் リエ』『 86
பக்கம்:ஜெயில்.pdf/91
Appearance