உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜேயில் விட்டது. கடவுளுக்குப் போட்டியாகப் பூலோகத்தில் மனிதன் படைத்த நரகமே ஜெயில் என்று சொல்லி விடலாம். தக்க சட்டங்களும், ஒழுங்கான நீதி விசா ரணையும் இல்லாக பழங்காலத்திலும் ஜெயில் மட்டும் இருந்து வந்திருக்கிறது. அப்பொழுது ஜெயிலுக்குள்ளே எத்தனை ஆயிரம் நிரபராதிகள் துயரத்தில் அழுத்தி யிருப் பார்கள் என்பதைக் கணக்கிட முடியாது. மனிதர்கள் கைது செய்யப்பட்டவுடன் ஜெயிலுக்குள் தள்ளப் படுவார்கள். மாதக் கணக்காக, வருஷக் கணக்காக, விசாரணை முடிவாகாமல் இருக்கும். கைதிகளின் உணவுக் காகப் பந்துக்களோ நண்பர்களோ பணமும் பொருள் களும் கொண்டு கொடுப்பார்கள். காவலர்ளர்களுக்குச் சம்பளம் ஒன்றும் கிடையாது. கைதிகளையும் அவர்த ளுடைய உறவினர்களையும் மிரட்டியும் வதைத்தும் அவர்கள் ஊதியம் பெற்று வந்தார்கள். கைதிகளே அதிக மாய்த் தொந்தரவு செய்தால்தான் ஊதியமும் அதிகமாய்க் கிடைக்கும். இந்த நிலையில் ஒவ்வொரு கைதியும் ரக வேதனையை அநுபவிக்க நேர்ந்தது; ஒவ்வொரு காவலாள னும் இரக்கமற்ற கொடுங்கோலனுக விளங்க தேர்ந்தது. முற்காலத்துத் தண்டனைகளும் மிகப் பயங்கர மானவை. உடலின் பல அங்கங்களே வெட்டுவது முதல், சிரச் சேதம், கழுவேற்றுதல், கழுத்தில் சுருக்கிடுதல் வரை விதவிதமான தண்டனைகள் உண்டு. சில சமயங் களில் குற்றவாளிகளே இரும்புக் கூடுகளில் அடைத்து, வ ண் டி களி ல் ஏற்றி, நடுத்தெருக்களில் கொண்டு போய் நிறுத்தி வைத்துவிடுவார்கள். நாள் கணக்காகப் பட்டினி கிடந்து குற்றவாளிகள் மடிந்து போவார்கள். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/9&oldid=855585" இலிருந்து மீள்விக்கப்பட்டது