கட்டுரைகள் பிணைப்பது சங்கந்தான். ஐக்கியமே அவர்கள் வலிமை. அவர்கள் விசேஷக் கல்வியறிவு பெற்றிராவிடினும், சங்கத்தின் மூலமும், சங்கத் தலைவர்கள் மூலமும், கொடுமைகளை எதிர்த்து கின்று, தங்கள் நியாயமான உரிமைகளை நிலைநாட்ட முடிகின்றது. இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் நிலைமை இதற்கு சேர் மாருக இருக்கிறது. பொதுவாக நிலத்தில் வேலை செய்பவர்கள், ஆலைத் தொழிலாளர்களைப் போல் விரிக்க மனுேபாவமும், எதிர்காலத்தில் நம்பிக்கையும், தியாக புத்தியும், கட்டுப் பாடும், புரட்சிகரமான மனப்பான்மையும் பெறுவது மிகவும் கஷ்டம். தவிரவும், நிலத்தோடு ஒட்டி வளர்ந்த மூடப் பழக்கங்களும், பொய்மைகளும் அவர்களே முன்னேற வொட்டாமல் தடுத்து விடுகின்றன. இதனல் தான் உழைப்பாளர் போராட்டங்களில், ஆலேத் தொழி லாளரைப் பின்பற்றியே குடியானவர்கள் செல்லு கிருர்கள் - அதுவும் குறித்த ஒர் அளவுக்குத்தான். இலங்கைத் தோட்டத் தொழிலாளருக்கு இயற்கை யாக உள்ள குறைபாடுகளுடன், தோட்ட முதலாளிகள் வேறு பல இடையூறுகளையும் செய்து வைத்திருக் கிருர்கள். தோட்டத்தில் உள்ளவர்களைத் தவிர வெளியில் இருந்து யாரும் உள்ளே வரக்கூடாது என்று தோட்டக் தோறும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிய போர்டு தொங்கவிடப்பட் டிருக்கிறது. உள்ளே போக சூப்பிரண்டு துரையின் சம்மதம் வேண்டும். இத்தகைய போர்டுகள் யாருக்காக மாட்டப்பட் டிருக்கின்றன? யாரேனும் வழிப் போக்கர் தோட்டத்தைப் பெயர்த்து எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள் என்ற பயத்தினுலா ? 54
பக்கம்:ஜெயில்.pdf/59
Appearance