உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஜெயில்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுரைகள் இலங்கைப் பெரிய கங்காணிமார்கள் தனிச் சங்கம் வைத்திருக்கிருர்கள். பெரிய கங்காணிமார்களின் சக்தி தொழிலாளரையே பொறுத்திருப்பதால், அவர்கள் சங்கமும், அவர்களுக்குக் கீழ் உள்ள மற்ற கங்காணி மார்களும் தொழிலாளர் நலத்தோடு தங்கள் நலத்தையும் சேர்த்துப் பாவித்து அதற்காக உழைக்க வேண்டும். பெரிய கங்காணிமார்களில் பலர் மிக்க நாகரிகமும், செல்வமும், கல்வியறிவும் ப ைடத் தி ரு ப் பதோடு, அன்ருடம் உலக விஷயங்களை அறிந்தவர்களாகவும் இருக் கிருர்கள். அவர்கள் யாவரும் தங்கள் செல்வாக்கை உபயோகித்துத் தொழிலாளரை விழிப்படையச் செய்ய வேண்டும். அறியாமையில் உ ழ லும் தொழிலாளர் கங்காணிகளுக்கும் ஆபத்தாகவே இருப்பார்கள். முதலில் தொழிலாளரை விழிப்படையச் செய்யவேண்டும்; வாய் இல்லாப் பூச்சிகளாகிய அவர்களைப் பேச வைக்க வேண்டும். கடைசியாக ஒரு விஷயத்தைக் கு றி ப் பி ட வேண்டியது அவசியம். தொழிலாளரை அடித்து ஹிம்சிக்கும் முறை இன்னும் தோட்டங்களில் மறைய வில்லை என்று பலவிதப் புகார்கள் வருகின்றன. மோச மான கொடுமைகள் பலவும் அடிக்கடி இழைக்கப் படுகின்றன. மேலே கூறப்பட்ட பலவிதக் கஷ்டங்களுக்கு நடுவே நமது தொழிலாளர்கள் தோட்டக்காடுகளில் வேலை செய்து வருகிருர்கள். இவர்களுடைய வாழ்க்கையைக் கண்டு பொருமைப் படக்கூடிய சிலர் இருக்கிருர்கள் என்ருல் நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அச் சிலர் 58

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஜெயில்.pdf/63&oldid=855528" இலிருந்து மீள்விக்கப்பட்டது