ஜெயில் கொலை செய்வது மனிதத் தன்மைக்கும் நாகரிகக் திற்கும். பொருத்தமான தண்டனையாகாது. ஜெயிலில் ஒரு கைதியைத் தூக்கிலிடும் தினம், ஜெயில் அதிகாரி களுக்கும் அங்குள்ள எல்லாக் கைதிகளுக்குமே ஒரு துக்க தினம் என்றும், தாக்கிடும் காரியத்தை நிறை வேற்றும் அதிகாரிகளும் வெறுப்போடு வேகமாக முடித்துவிட்டு வெளியேற விரும்புகிருர்கள் என்றும் பர்மா ஜெயில் இன்ஸ்பெக்டர் - ஜெனரலாக இருக்க லெப்டினன்ட் கர்னல் தரபோர் கூறுகிரு.ர். -- 를 * ஜெயில் அதிகாரிகளும் வார்டர்களும் கைதிகளைப், போலவே நம் அநுதாபத்திற்கு உரியவர்கள். அவர்கள் குற்றம் ஒன்றும் செய்யாமலே ஜன்ம தண்டனை அடைந்தவர்கள்! அவர்களுக்கும் விமோசனம் வேண்டும். இப்பொழுது ஜெயில் சீர்திருத்த விஷயத்திலும், நீதியான நீதி விசாரணை முறையிலும் உ ல க க் தி ன் முன்னணியில் நிற்கும் ரஷ்யாவில் நடைபெறும் காரியங் களே நாம் கவனமாக ஆராய்ந்தால் விமோசன மார்க்கம் நன்கு புலகுைம். ரஷ்யாவிலுள்ள ஸோவியத் சட்டங்கள் ஏற்பட்டு 25-வருஷமே ஆகிறது. ஆயினும் அவைகளே ஆராய்வதும், வெளிநாட்டுச் சட்டங்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதும் மிகுந்த பலனை அளிக்கும். நாமும், அதிகாரி களும், முக்கியமாக ஜெயில் நிர்வாகிகளும் ரஷ்ய முறைகளைப் பற்றி எழுதப்பட்ட புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படித்தறிய வேண்டியது மிகமிக 17 * 3
பக்கம்:ஜெயில்.pdf/22
Appearance