பக்கம்:தம்ம பதம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குற்றம் ☐ 59

237. தட்டார் வெள்ளியின் அசுத்தங்களைப் போக்குதல் போல, மேதாவியானவன் தன் மாசுகளைக் கொஞ்சங் கொஞ்சமாக, முறையாக, அவ்வப்போது நீக்கி வரட்டும். (5)

238.இரும்பிலிருந்து துரு தோன்றினும், அதை அது அரித்து விடுகிறது; அதுபோலவே (அற நெறி) பிறழ்ந்தவனை அவனுடைய கருமங்களே தீய கதியில் கொண்டு சேர்க்கின்றன. (6)

239. மந்திரத்தின் குறை பாராயணம் செய்யாமை;

வீட்டின் குறை பழுது பாராமை;
அழகின் குறை சிரத்தையின்மை;
காவலாளியின் குறை கவனக்குறைவு.

(7)

240. பெண்ணுக்கு இழுக்கு தீய நடை; கொடையாளிக்கு இழுக்கு கருமித்தனம்; தீச்செயல் யாவும் இம்மையிலும் மறுமையிலும் இழுக்குடையவை. (8)

241. மலங்களில் எல்லாம் பெரியதோர் மலம் உண்டு - அறியாமையே முதன்மையான மலம். பிக்குக்களே! அந்த மலத்தையும் ஒழித்துவிட்டு மாசற்றவராக விளங்குவீர்! (9)

242. வெட்கமின்றிக் காகம் போல் துணிவுடையவனுக்கும், வம்பு வளர்ப்பவனுக்கும், புறங்கூறுவோனுக்கும், முரடனுக்கும், துார்த்தனுக்கும் வாழ்க்கை எளிதாகவே யிருக்கிறது. (10)

243.ஆனால், நாணமுள்ளவனுக்கும், நன்னெறியில் நாட்டமுள்ளவனுக்கும், சுயநல மற்றவனுக்கும், அகங்கார மற்றவனுக்கும், தூயோனுக்கும் வாழ்க்கை கஷ்டமாகவே யிருக்கிறது. (11)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தம்ம_பதம்.pdf/61&oldid=1358019" இலிருந்து மீள்விக்கப்பட்டது