மன உடல் இல்லாத நிலையில் உணர்ச்சியும் இல்லை; மன - உடல் நின்றதும் உணர்ச்சியும் நின்றுவிடுகின்றது. '
பிக்குகளே ‘பதிச்ச - சமுப்பாதம்' (பொருளுற்பத்திக்குரிய 49; காரண நியதி) என்பது என்ன? செய்கைகள் பேதைமையால் நிர்ணயிக்கப்படுகின்றன, உணர்ச்சி செய்கைகளால் நிர்ணயிக்கப்படுகின்றது: அரு -உரு(நாம - ரூபம்) உணர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகின்றது; வாயில் (புலஆடுது உணர்வு) அரு - உருவால் நிர்ணயிக்கப்படுகின்றது; நுகர்த்தி ஊற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றது; வேட்கை நுகர்ச்சியால் நிர்ணயிக்கப்படுகின்றது: கருமத் தொகுதி பற்றினால் நிர்ணயிக்கப்படுகின்றது. தோற்றம் (பிறப்பு) கருமத்தொகுதியால் நிர்ணயிக்கப்படுகின்றது; வினைப்பயன் தோற்றத்தால் நிர்ணயிக்கப்படுகின்றது. துக்கம் அனைத்தும் தோன்றுவது இவ்வாறுதான். ஆனால் பேதைமை அறவே நீங்கி அழிந்து விட்டால் செய்கையும் தீர்ந்துவிடும். 'செய்கை மீள உணர்ச்சி மீளும், உணர்ச்சி மீள, அருவுரு மீளும், அருவுரு மீள, வாயில் மீளும, வாயில் மீள, ஊறு மீளும், ஊறு மீள, நுகர்ச்சி மீளும், நுகர்ச்சி மீள, வேட்கை மீளும், வேட்கை மீளப் பற்று மீளும், பற்று மீளக் கருமத் தொகுதி மீளும், கருமத்தொகுதி மீளத் தோற்றம் மீளும், தோற்றம் மீளப் பிறப்பு மீளும், பிறப்புப் பிணிமூப்புச் சாக்காடு அவசலம் அரற்றுக்கவலை கையாறு என்(று)இக் கடையின் துன்பம் எல்லாம் மீளும்..." துக்கம் அனைத்திலிருந்தும் மீட்சி பெறுதல் இவ்வாறுதான்.
பிக்குகளே வினைப்பயன் (முதுமை, மரணம் சிேAலியவை) என்பது என்ன? மணிமேகலை, 82 | புத்தரின் போதனைகள்