பின்னர் ஒரு ததாகதர், அருகத்து, ஸம்மா லம்புத்தர் தோன்றுகிறார்: அவர் பூரண ஞானமும் பயிற்சியும் பெற்றவர். நன்மையை நாடுவோர், உலகை உணர்ந்தவர், மக்களை நெறிப்படுத்திச் செலுத்துவதில் இணையற்ற சாரதி, தேவர்களுக்கும் மானிடர்க்கும் ஆசாரியர், போதியடைந்த பகவர் ஆவார். அவர் தருமத்தை உபதேசிக்கிறார். (மேலே கூறிய) மனிதன் அத்தருமத்தைச் செவிமடுத்துக் கேட்கிறான். உலகைத் துறந்து, மேலான தற்பயிற்சி முறையை மேற்கொள்கிறான். பின்னர் அவன் ஆரியச் சீலங்கள் அனைத்தும் கைவரப் பெற்று, புலன் உணர்ச்சிகளில் அடக்கம் பெற்று, தன்னடக்கத்தோடு கருத்துடனிருந்து, ஒதுக்கமான வாசஸ்தலம், வனம் அல்லது மரத்தின் அடிநிலம், மலை, அல்லது குகை, அல்லது மலைச்சரிவு, அல்லது சுடுகாடு, ஏகாந்தமான தோப்பு, அல்லது திறந்த வெளி. (அமர்வதற்கு) ஒரு வைக்கோற் குவியல் - ஏதாவது ஒன்றைத் தேர்ந்து கொள்கிறான். அங்கே பிட்சையெடுத்த உணவைப் புசித்துவிட்டு, அவன் அட்டணைக் காலிட்டு அமர்ந்து கொண்டு, உடல் நிமிர்ந்து, கருத்துடைமையில் நிலைபெற்று, உலகிலுள்ள ஆசாபாசங்களற்ற சிந்தனையுடன் தங்குகிறான். இன்னா செய்தல் என்ற கறையை ஒதுக்கிவிட்டு, அவன் அஹிம்சையில் நிலைபெறுகிறான். உயிருள்ள ஒவ்வொரு பிராணியிடத்தும் அன்புள்ள சிந்தனையோடு, அவன் தன் இதயத்திலுள்ள ஹிம்சை எண்ணங்கள் அனைத்தையும் கழுவித் துய்மை செய்கிறான். மடிமையையும் அயர்வையும் ஒதுக்கிவிட்டு அவன் அவைகளிலிருந்து தப்பியிருக்கிறான். உள்ளொளியை உணர்ந்து, கருத்தோடும், தன்னடக்கத்தோடும், அவன் உள்ளத்தின் சோம்பலையும் அயர்வையும் துடைத்துச் சுத்தமாக்குகிறான். குழப்பத்தையும் கவலையையும்விட்டு, அவன் சலனமின்றி நிலைபெறுகிறான். உள்ளத்தின் சாந்தியுடன் அவன் கவலையையும் குழப்பத்தையும் நீக்கிச் சுத்தம் செய்கிறான். சந்தேகத்தை ஒழித்து, அவன் சலனமின்றி யிருக்கிறான். நன்மையான விஷயங்களைப் பற்றி எப்படி, ஏன் என்ற கேள்விகளைக் கேட்டுக்கொண்டிராமல், அவன் உள்ளத்தைச் சலனமின்றித் தூய்மையாக்குகிறான். இவ்வாறு ஐந்து வகைத் தடைகளை" மேற்கொண்டு எஞ்சியுள்ள ஆஸ்வங்களையும் ஞானத்தால் அழித்து, புலன்களின் ஆசைகளிலிருந்து விலகி, தீவினைகளிலிருந்து ஒதுங்கி, அவன் நால்வகைத் தியானங்களை மேற்கொள்கிறான். பின்னர், அவன் கண்ணால் ஒர் உருவத்தைப் பார்த்தால், மயக்குகின்ற உருவங்களில் அவன் மேற்கொண்டு ஆசை கொள்வதில்லை. ஐந்துவகைத் தடைகள்: அவா, வெறுப்பு, மடிமை, கர்வம், மயக்கம். 50 | புத்தரின் போதனைகள்
பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/58
Appearance