1. தற்பயிற்சி
தருமமே எனது நிலம். வாழ்க்கையைப் பற்றியிருக்கும்.ஆசைஎன்னும் களைகள்.அதில் உண்டாவதை நான்களைந்தெறிகிறேன். ஞானம் என்பது என் கலப்பை, கருத்துடைமை எனது தார்க்கோல். விடாமுயற்சி என்ற எருதுகள் ஏரை இழுத்துச் செல்கின்றன. (மெய்ப் பொருளை உணரும்) தெளிவான காட்சிகளே நான் விதைக்கும் விதைகள். நல்லொழுக்கமே நான் பாய்ச்சும் நீர். எனது அறுவடை எது தெரியுமா? என்றும் அழிவில்லாத நிருவான" அமிழ்தம். இந்த விளைவைப் பெறுகிறவர்களுக்கு என்றென்றும் குறைவேயில்லை "
நேர்மையான ஒழுக்கத்தை ஆதாரமாய்க் கொண்டு, சிந்தையை ஒருநிலைப்படுத்தும் சமாதியால் (தியானத்தால்) விளையும் பயன் பெரிது, மகத்தானது. சமாதியை ஆதாரமாய்க்கொண்டு அடையும் ஞானத்தால் விளையும் பயன் பெரிது, மகத்தானது. ஞானத்தால் செம்மையுற்ற உள்ளம் புலன்களின் ஆசைகளிலிருந்தும், 'நான்' என்ற அகங்காரத்திலிருந்தும், மயக்கம், அறியாமைகளிலிருந்தும் விடுதலை பெறுகின்றது.
ஒரு நுகத்தடியில் பூட்டப்பெற்ற இரு காளைகளாக விளங்குபவை புலன்களும், அவை நாடிச் செல்லும் பொருள்களும். இரண்டையும் குறித்தஅளவுக்குள் கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். கட்டுப்பாடில்லை யென்றால், இரண்டுக்குமிடையே ஆசைகள் வளர ஆரம்பிக்கின்றன. ஏனெனில், இரண்டும் பொருத்தமில்லாதபடி ஒன்றுக்கொன்று மிஞ்சிய காளைகள்... ஆதலால்தான், 'இதயத்தை அடக்கிவையுங்கள், கட்டுப்பாடில்லாமல் அதைவிட்டு விடக்கூடாது' என்று நான் கூறுகிறேன். "
- *
உங்களுக்கு நீங்களே தீபங்களாயிருங்கள். உங்களுக்கு நீங்களே புகலிடமாயிருங்கள். வெளியில் எத்தகைய புகலிடத்தையும் நாடாதீர்கள்." -
"நிருவாணம் - பெளத்த தருமத்தின் இலட்சியமான முக்தி நிலை.
15