உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புத்தரின் போதனைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



3. ஞானம்


காமமாகிய வெள்ளம் யாவர்க்கும் அபாயம் விளைவிக்கும்: உலகத்தையே அது அடித்துக்கொண்டு போய்விடுகின்றது. அதன் சுழல்களிலே சிக்கியவனுக்கு மீட்சிபெற வழியில்லை. ஆனால் ஞானம் என்னும் ஒடம் அந்த வெள்ளத்திலிருந்து காக்கும், ஆழ்ந்த தியானமே அதன் துடுப்பு. " o

    • ★★

தருமஉபதேசங்களைக்கேட்டறிந்த ஞானிகள், ஆழமாயும், தெளிவாயும், அமைதியாயுமுள்ள ஏரியைப்போல், சாந்தியடைகிறார்கள்.'

    • ★★

இானத்திற்கு உரிய (ஏழு) அங்கங்களில்" சித்தத்தை நிலைநிறுத்தி, எதிலும் பற்று வைக்காமல், ஆசைகளை அடக்கி வென்று, எவர்கள் மாசற்ற ஒளிமயமாய்த் திகழ்கிறார்களோ, அவர்கள் இந்த உலகிலேயே நிருவாண மோட்சத்தை அடைகிறார்கள். '

    • ★★

உண்மையான ஞானத்தின் மூலம் விடுதலை பெற்றவனுடைய மனம் சாந்தியாயிருக்கும், சொல் சாந்தியாயிருக்கும், செயலும் சாந்தியாயிருக்கும்.

    • ★★

அறியாமையுடன் அடக்கமில்லாமல் நூறு வருடம் ஒருவன் வாசிவதைக் காட்டிலும், ஞானத்தோடு தியானம் புரிந்துவரும் ஒருவன் ஒருநாள் வாழ்வதே மேலானது. '

    • ★★

இந்த உலகம் அரசனுடைய அலங்கரிக்கப்பெற்ற தேர்போல ஜொலிப்பதை வந்து பார் பேதைகள் இதிலே ஆழ்ந்து விடுகிறார்கள், ஞானிகளுக்கு இதிலே பற்றில்லை'

    • ★★

இானமில்லாதவனுக்குத்தியானம் இல்லை; தியானமில்லாதவனுக்கு இானம் இல்லை. தியானமும் ஞானமும் சேர்ந்திருப்பவனே நிருவாணத்தின் பக்கம் இருக்கிறான்.'


ஏழு அங்கங்கள். ஞானத்தை அடைவதற்குரிய ஏழு கருவிகள்: சாமர்த்தியம், இாபகம். மனனம், சாத்திர ஆராய்ச்சி, ஆனந்தம், சாந்தி, சமதிருஷ்டி என்பவை. இவைகளை . 'ஸப்த போத்தியாங்கங்கள் என்பர்.


20 \ புத்தரின் போதனைகள்