பக்கம்:மைக்கேல் காலின்ஸ்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டாய ராணுவச் சட்டம் 77 A காலத்தில் சோதனையிடப்பட்டன. காலின்ஸ் மூலம் தகவல் தெரிந்த சிலர்மட்டும் தப்பித்துக்கொண்டனர். ஆயினும் டிவேலரா, கிரிபித், கவுண்ட் பிளங்கெட், காஸ்கிரேவ் முதலிய எண்பதுக்கு மேற்பட்ட தலைவர்கள் கைதி செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாடு கடத்தப்பட்டு, இங்கிலாந்தில் லிங்கன், டர்ஹாம், குளோ ஸெஸ்டர், ரீடிங், உஸ்க், பர்மிங்ஹாம், ஹாலோவே முதலிய இடங்களில் சிறைவைக்கப்பட்டனர். # கைதி செய்யப்பட்டவர்களுக்கு ஏதாவது விசாரணை யுண்டா ? சாட்சிகள் விசாரிக்கப்பட்டனரா ? ஒன்று மில்லை. எல்லோரும் ஜெர்மனியுடன் சதியாலோசனை செய்ததாகச் சொல்லப்பட்டது.! மற்றையோர் கைதிசெய்யப்பட்ட பொழுது காலின்ஸ் தப்பிக் கொண்டான். இரவில் ரஸ்தாவில் போய்க் கொண்டிருந்த பொழுது பட்டாளத்தார் நிற்பதைக் கண்டு, அவன் வேறு தெரு வழியாக மறைந்து சென்று, தொண்டர் படைத் தலைவரைக் கண்டு எச்சரிக்கை. செய்யவேண்டும் என்று கருதின்ை. அவன் பார்க்கு முன்பே அவரைக் கைதிசெய்து கொண்டுபோய் விட்ட னர். அன்றிரவு முழுதும் போலீஸார் சோதனே செய்து கொண்டே யிருப்பார்களாதலால், தங்குவதற்குச் செளக் ரியமான இடம் எது என்று யோசிக்கையில், கைதியான தொண்டர் படைத் தலைவர் வீடுதான் தக்கது என்று கருதி, அவன் அங்கேயே தங்கி இரவுப் பொழுதைக் கழித்தான்.