உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

υ. αααραυων/τώ' 54, 197 இளைஞருக்கு வழி காட்டுதல், ஆற்றலைப் பெருக்குதல், நம்பிக்கை ஊட்டுதல், அணைக்கின்ற கரிக்கங்குகளை ஊதித் தீ மூட்டுதல், புதிய சிந்தனையாலும் உறுதியான செயலாலும் தோல்வியை வெற்றியாக்குதல் - இவையெல்லாம் எளிதான காரியங்களல்ல. இவை தெய்விக மனிதர்களின் வேலையாகும். அ எமர்பைன் நாம் நமக்காக மட்டும் வாழ முடியாது. நம் சகோதர மக்களையும் நம்மையும் ஆயிரக்கணக்கான மெல்லிய நூலிழைகள் ஒன்றாகப் பிணைத்துள்ளன. இந்த இழைகளின் வழியாக நம் செயல்கள் அனுதாபத்துடன் காரணங்களாகச் செல்கின்றன. பின்னர் அவை பயன்களாக நம்மிடம் திரும்பி வருகின்றன. அ மெல்வில்லி செல்வத்தை அடையும் வழி, சந்தைக்குச் செல்லும் வழியைப் போல். தெளிவாக உள்ளது. அது முக்கியமாக இரண்டு சொற்களில் அடங்கியுள்ளது. சுறுசுறுப்பு சிக்கனம். அ ஃபிராங்க்லின் அருவருப்பான இந்த உலகத்தில் எந்த விஷயத்தைக்காட்டிலும் அதிகமான கொலைகளைத் தங்கம் செய்துள்ளது.விஷங்களைக் காட்டிலும் கொடிய தங்கம் மனிதர்களின் ஆன்மாக்களையே வதைப்பதாகும். ைஷேக்ஸ்பியர் செல்வாக்கு உலகை ஆட்டிவைக்க விரும்புவோன் முதலில் தன்னை இயக்கி வைத்துக்கொள்ள வேண்டும். - சாக்ரடீஸ் மனிதர்களை வசப்படுத்துவது. அவர்களைக் குறை சொல்வதாலன்று. அவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வதால் இயலும். க சான்னிங் பேரறிவும் புனித வாழ்வும் உலகம் வெளியிடும் சிந்தனைகள். உலகை மாற்றிவிடுகின்றன. அ எமர்பைன்