பக்கம்:உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் வராயிருக்க வேண்டும். நாம் இயற்கைக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர, அதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. உங்கள் உடல்நிலைக்கு ஒத்துவரக்கூடிய உணவுகளை நிதானமாக உண்ணவும். நாம் சீரணித்துக்கொள்ள முடியாதது எதுவும் உடலுக்கு நல்லதன்று. ஜீரண சக்தியை அளிக்கக்கூடியது எது? உடற்பயிற்சி, வலிமையளிப்பது எது? உறக்கம். தீர்க்க முடியாத நோய்களையும் குறைக்கக்கூடியது எது? பொறுமை, அ வால்டேர்

  • இந்தக் காலத்தில் தோன்றும் பிணிகளில் பாதி, உடலைக்

கவனியாமல், மூளையால் அதிக வேலை செய்வதாகும். அ புல்வெர்

  • ஆரேக்கியமிருந்தால்தான் வாழ்க்கையின் இன்பங்களை அனுபவிக்க முடியும். இல்லையெனில், அவை ருசியில்லாமல் வாடிவிடும்
  • மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று. அ திருவள்ளுவர் (மூன்று வாதம், பித்தம், சிலேத்துமம்) * அற்றால், அளவு அறிந்து உண்க. அ கிாள்ைளுவர் ஆலோசனை

  • நல்ல ஆலோசனையைக் கேட்பது நம் திறமையை அதிகப்

படுத்தும். கதே

  • உணர்ச்சி தணிந்துவரும் சந்தர்ப்பம் பார்த்து நல்ல உபதேசங்களைச் சொல்ல வேண்டும். அ ஷேக்ஸ்பியர்
  • நாம் வாளி வாளியாகப் பிறருக்கு ஆலோசனை

சொல்லுவோம். ஆனால், பிறருடைய ஆலோசனையில் நாம் குண்டுமணி அளவே எடுத்துக்கொள்வோம். ஆல்ஜெர்